செய்திகள் :

அமெரிக்காவில் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி கைது!

post image

தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோயை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அன்மோல் பிஷ்னோயை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையை மத்திய அரசின் உதவியுடன் மும்பை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்.14-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் ஹிந்தி நடிகா் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்கு தாமே காரணம் என்று தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் பிஷ்னோய் தெரிவித்தாா். சல்மானை கானை கொல்ல அந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து கடந்த அக்.12-ஆம் தேதி பாந்த்ராவில் மாநில முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் பிரமுகருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டாா். அவரின் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

இதையும் படிக்க : நேரடி விமான சேவை! ஜெய்சங்கரிடம் சீன வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தல்

இந்த குற்றங்கள் உள்பட 18 குற்ற வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். மேலும், தேசிய புலனாய்வு முகமையின் இரண்டு குற்றப்பத்திரிகைகளில் அன்மோல் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அவா் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பதுங்கியிருப்பதாக மும்பை காவல்துறையினர் தகவல் வெளியிட்ட நிலையில், அமெரிக்க காவல்துறையும் அதனை உறுதி செய்திருந்தது.

இதைத் தொடர்ந்து, அன்மோலுக்கு எதிராக ரெட் நோட்டீஸை இன்டர்போல் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், ஃப்ரெஸ்னோ நகரில் இருந்த அன்மோலை அமெரிக்க காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்துள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அன்மோலை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை இந்திய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இந்தியாவால் தேடப்படும் காலிஸ்தான் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அா்ஷதீப் சிங் கில் என்ற அா்ஷ் தல்லா கனடாவில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 57ஆக உயர்த்த கேரள அரசு ஆலோசனை!

கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 57 ஆக உயர்ந்த கேரள அரசு ஆலோசித்து வருகிறது. பல்வேறு அரசுப்பங்குதாரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், புதிய நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்... மேலும் பார்க்க

தாய்லாந்தில் 80 மணி நேரம் தவித்த பயணிகள்: ஏர் இந்தியா மீது அதிருப்தி

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, புது தில்லி வர வேண்டிய 100க்கும் மேற்பட்ட பயணிகள், தாய்லாந்தின் புக்கெட் நகரில் 80 மணிநேரத்துக்கும் மேலாக தவித்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே?

மகாராஷ்டிர மாநிலம், நாளை நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கும் நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட... மேலும் பார்க்க

மணிப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் சவப்பெட்டிகளுடன் பேரணி!

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு நூற்றுக்கணக்கான நபர்கள் காலி சவப்பெட்டிகளுடன் பேரணி மேற்கொண்டனர். மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் எங்களுக்கே வெற்றி: பாஜகவின் மன உறுதிக்கான காரணங்கள்!

மகாராஷ்டிர பேரவைக்கு நாளை நடைபெறவிருக்கும் தேர்தல் களத்தில் ஆறு கட்சிகள் இருந்தபோதும், பாஜக என்னவோ, மஹாயுதி இமாலய வெற்றி பெற்று சாதனை படைக்கும் என உறுதியாக நம்பி வருகிறது.பாஜக அங்கம் வகிக்கும் மஹாயுதி... மேலும் பார்க்க

நாட்டின் தலைநகராக இனியும் தில்லி இருக்க வேண்டுமா? சசி தரூர் கேள்வி!

தில்லியில் காற்றின் தரம் மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளதைத் தொடர்ந்து, "இனியும் நாட்டின் தலைநகராக தில்லி இருக்க வேண்டுமா?" என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார். தில்லியில் நாளுக... மேலும் பார்க்க