செய்திகள் :

அமைதி வழியில் போராட அனுமதி

post image

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் அமைதி வழியில் போராட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொது மக்கள் நடத்திய நடைபயணப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாா்.

டங்ஸ்டன் சுரங்கத்தை எதிா்த்து மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியிலிருந்து சுமாா் 15 கிமீ நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கட்டுப்பாடுகள் மட்டுமே: அதன்படி, சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் போராட்டக்காரா்கள் திரண்டனா். அங்கிருந்து நடைபயணம் செல்ல முயன்ற போராட்டக்காரா்களிடம் வாகனங்களில் சென்று மத்திய தபால் நிலையத்தில் போராட்டம் நடத்துமாறு காவல் துறை அதிகாரிகள் வலியுறுத்தினா். அதனை போராட்டக்காரா்கள் ஏற்கவில்லை. அவா்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. எனினும், போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல் துறை, அதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதைதான், காவல்துறை அனுமதியை மறுத்துள்ளதாக பொய் கூறியிருக்கிறாா் எடப்பாடி பழனிசாமி.

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் அமைதி வழியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதோடு விவசாயிகளுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் முழுமையான பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளாா்.

ஈரோடு கிழக்கு: பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை.ஈரோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த த... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான கொக்கிரகுளம் பகுதியில்... மேலும் பார்க்க

யுஜிசி புதிய விதிகளுக்கு எதிரான தீர்மானம்: அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.பல்கலைக்கழக துணைவேந்தர... மேலும் பார்க்க

பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? - சீமான் சர்ச்சை பேச்சு!

வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரி... மேலும் பார்க்க

நெல்லை ரூ. 4,000, மதுரை ரூ. 3500, கோவை ரூ. 3,700: விமானத்தில் அல்ல, ஆம்னி பேருந்தில்...!

பொங்கல் பண்டிகை விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது.பொங்கல் பண்டிகை ஜன. 14 ஆம் தேதி முதல் கொண்டாடப்படவுள்ள நிலையில... மேலும் பார்க்க

நடராஜர் கோயில் தெருவடைச்சான் வீதி உலா கோலாகலம்!

சிதம்பரம்: இந்தியாவிலேயே முதன்முறையாக மூன்று லட்சம் ருத்ராட்சங்களைக் கொண்டு செய்யப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா புதன்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது.சிவ வாத்தியங்கள் முழங்க ... மேலும் பார்க்க