செய்திகள் :

`அம்மாவின் வாரிசு’ - மகளின் நெகிழ்ச்சி தருணம்| My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்

இந்துஜாவுக்கு காலை எழுந்ததிலிருந்து அம்மா பத்மாவின் நினைவாகவே இருந்தது. சமையல் வேலையில் கவனம் செல்லவில்லை. அம்மா இறந்து இன்றோடு ஆறு வருடங்கள் ஓடிவிட்டனவே. வருடங்கள் நகர நகர தன் துக்கம் அதிகமாகிக் கொண்டு போவது போல உணர்ந்தாள். 

அம்மா பத்மா ஒரு வித்தியாசமான மனுஷி. சுற்றமும் நண்பர்களும் அவளை ஜீனியஸ் எனக் கொண்டாடுவார்கள். படிப்பில் டாப். யுனிவர்சிடி ராங்க் ஹோல்டர். ஜீனியஸாக இருந்ததால் தானோ என்னவோ அவள் குணமும் வேறாகத்தான் இருந்தது.

பல அலுவலகங்களில் இருந்து அவளுக்கு உயர்ந்த பதவி வாய்ப்புகள் வந்தன.  ஆனால் ஒரு வேலையிலும் நிலைத்து இருக்கவில்லை. கொஞ்சம் ஈகோ. கொஞ்சம் முன் கோபம் என கலவையான குணம். தன் இறுதி காலம் வரை ஒரு ஆசிரமத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சேவை செய்து வந்தாள்.

சித்தரிப்புப் படம்

‘டமால்’ என சத்தம் கேட்டு சமையறையிலிருந்து ஹாலுக்கு விரைந்து வந்தாள் இந்துஜா. நான்கு வயது மகள் பாக்யா ஃபிரிட்ஜில் வைத்திருந்த தயிரை எடுக்கப் போய் தரையிலும் அவள் உடையிலும் தயிரை கொட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.

‘என்னடி எதற்கு என்னை கூப்பிடாம தயிரை நீயே எடுத்தே’ இந்துஜா அதட்ட சிறிதும் அலட்டிக்காமல் “ ஃப்ராக் டர்ட்டி ஆச்சு வேற மாத்து’ என்கிறாள்.

தயிரைக் கொட்டி விட்டோமே என்ற உணர்வோ, பதட்டமோ சிறிதும் இல்லை. அப்படியே அம்மா தான். பெரியவள் பாரதி லேசாக கடிந்து கொண்டால் கூட அழ ஆரம்பித்து விடுவாள்.

மகளுக்கு உடையை மாற்றி விட்டு தரையையும் சுத்தப்படுத்தினாள்.  பாக்யா பிறப்பதற்கு முன்பே அம்மா இறந்து விட்டாள். பெரிய பெண் பாரதியிடம் அம்மாவுக்கு அலாதி பிரியம்.

அம்மா பத்மாவுடன் இந்துஜாவுக்கு நிறைய கருத்து முரண்பாடுகள் இருந்தன. அம்மாவின் செயல்கள் சில சமயங்களில் விசித்திரமாக இருக்கும். அதை சுட்டிக் காட்டினால் தான் செய்வது தான் சரியென்பாள்.

இப்போது அந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் போது இந்துஜாவுக்கு தான் தான்  அம்மாவை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றியது .பொதுவாக ஒருவர் இறந்த பின் தான் அவர் செயல்களின் காரணம் தெரிய வருகிறது.

சித்தரிப்புப் படம்

அலுவலக டென்ஷனில் இருந்த கணவன் ரமணிக்கு வேகமாக டிபனை தயார் செய்து கொடுத்து அவன் சென்ற பின் காபியுடன் ஹாலுக்கு வந்தாள்.

ரமணி இரவு தான் வருவான். .குழந்தைகளுக்கும் இன்று விடுமுறை. எங்காவது சென்று வரலாமா என்றிருந்தது. அருகில் உள்ள புவனா சித்திக்கு போன் செய்து விட்டு அவர்கள் வீட்டுக்கு குழந்தைகளுடன் தயாராகி கிளம்பி போனாள். புவனா பத்மாவின் இளைய சகோதரி.

புவனா சித்தியும் சோர்வாகத் தான் தெரிந்தாள். இரவு சரியான தூக்கமில்லை என்றாள். சிறிது நேரம் குழந்தைகளுடன் விளையாடி விட்டு வந்த சித்தி இந்துஜாவிடம் பேசிக் கொண்டே சமையல் செய்ய ஆரம்பித்தாள்.

பொதுவான குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தவள்  தன் அக்கா பத்மாவைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டாள். நெருக்கமானவர்களின் நினைவு நாளில் அவர்களுடன் கழித்த மறக்க முடியாத இனிமையான தருணங்கள், சம்பவங்கள் ஞாபகத்தில் வரத்தானே செய்யும்.

சித்தரிப்புப் படம்

‘அடுத்தவருக்கு உதவ நினைத்த நொடியே கொடுத்து விடு, மனசு மாறி விடும் என்பாள் பத்மா.. சாவதுக்கு முன்பு கூட ஏழைப் பெண் திருமணத்துக்கு ஒரு லட்சம் கொடுத்தாள் உன்னிடம் சொல்லவில்லை. இன்னும் தன்னோட நிலத்தை வித்து வந்த இருபத்தாறு லட்சத்தை அப்படியே ஆசிரம பணிகளுக்கு கொடுத்து விட்டாளே.

ஏன் ஆசிரமத்துக்கு போகும் முன்பு கூட வீட்டில் இருந்த ஃப்ரிடஜ், ஏசி, டிஷ் வாஷர்,வாஷிங் மெஷின் எல்லாவற்றையும் வாரி தானமாகக் கொடுத்து விட்டு நாலே நாலு புடவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு போனாள். ஆசை ஆசையாய் தனக்கு வாங்கிக் கொள்வதைக் கூட சட்டென்று அடுத்தவருக்கு கொடுத்து விடுவாள். அவள் குணம் போல நம் வீட்டில் யாருக்குமேயில்லை’ அரற்றினாள் சித்தி.

சின்னவள் பசிக்கிறது என அழ ஆரம்பிக்க குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு இந்துஜா தானும் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பினாள். கிளம்பும் முன் சித்தி குழந்தைகளுக்கு வெளி நாட்டிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த சாக்லேட் பாக்ஸை கொடுத்தாள். பெரிய சாக்லேட் பாரை பார்த்து  பாக்யாவுக்கு செம சந்தோஷம். கையிலேயே வைத்துக் கொண்டாள்.

சித்தரிப்புப் படம்

ஆட்டோ பிடித்து இந்துஜா வந்து கொண்டிருந்த போது சிக்னலில் வண்டி நிற்க பாக்யா சட்டென்று கையிலிருந்த சாக்லேட் பாக்ஸை அங்கு குழந்தையுடன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த பெண்மணியிடம் கொடுத்து விட்டாள். ‘எதுக்கு என்கிட்ட சொல்லாம குடுத்தே’ இந்துஜா கேட்க ‘பாவம்மா’ பாப்பாக்கு பசிக்குது’ என்றவளை இறுக அணைத்துக் கொண்டாள். ‘அம்மா என்னோடு தான் இருக்கிறாள்’ இந்துஜாவின் மனத்தில் சொல்ல முடியாத ஒரு பரவசம்.

-வி. ரத்தினா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் –அத்தியாயம் 1 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

வெடிச் சத்தமும் வீங்கிய முதுகும் - அமெரிக்க வாழ் தமிழரின் தீபாவளி நினைவுகள் | My Vikatan

பால்ய காலத்தில், பள்ளிப் பருவத்தில் தீபாவளி என்றாலே மனது குதூகலிக்கும் ஒரு நிகழ்வு. தீபாவளி என்பது தமிழர் கொண்டாடும் விழாவா? அது தேவையா? என்ற கேள்விகளெல்லாம் மனதுக்குள் தோன்றாத ஒரு காலம். எங்கள் கிராம... மேலும் பார்க்க

`ப்ளீஸ்.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்களேன்!' - 90ஸ் கிட்ஸ் வேண்டுகோள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

சிவகாமியின் சபதமும் ராமாயணமும் - 60ஸ் பெண்ணின் பாட்காஸ்ட் அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரியின் பார்வையில் `அன்பே சிவம்’ ! | My Vikatan

நான் ஒரு சாலையோரக் கடை வியாபாரி. சாலையில் கடை வைத்திருப்பதால், அந்த சாலையில் நிகழும் சிறு சிறு விபத்துகளின் போது முதலுதவி செய்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது வழக்கமாகிவிட்டது. விபத... மேலும் பார்க்க