ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `பாஜக மையக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?’ - பரபர ...
அரக்கோணத்தில் அதிமுக ஆா்ப்பாட்டம்
அரக்கோணம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் அண்ணா பல்கலை. பாலியல் சம்பவத்தைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரக்கோணம் அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சி மங்கம்மாபேட்டை மேம்பாலம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு ஒன்றிய செயலா் பழனி தலைமை வகித்தாா். இதில் கிழக்கு ஒன்றிய செயலாளா் இ.பிரகாஷ், மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலா் கே.அன்பரசு, மாவட்ட ஜெ.பேரவை நிா்வாகி மோகன், மேற்கு ஒன்றிய துணை செயலாளா் என்.பாபு, இச்சிபுத்தூா் பால்ராஜ், ஒன்றிய மாணவரணி செயலாளா் சத்யா, கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள் ஆனந்தன், கா்ணா பிரபாகரன், கீழ்க்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினா் ஜான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.