தமிழகத்தைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசுத்தலைவர் விருது!
3.47 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் வழங்கினாா்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3,47,701 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலை விநியோகத்தை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வரும் 13- ஆம் தேதி வரை விநியோகிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை நகராட்சி, நவல்பூா் கற்பகம் நியாய விலைக் கடை, வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வீசி மோட்டூா் ஊராட்சி நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தொடங்கி வைத்தாா்.
மொத்தம் 656 நியாய விலைக் கடைகளில் 3,47,306 அரிசி பெறும் குடும்ப அட்டைகள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் உள்ள 395 குடும்பங்கள் என மொத்தம் 3,47,701 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவா்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதின் மூலம் பச்சரிசி 1 கிலோ ரூ.35.20. சா்க்கரை 1 கிலோ ரூ.42.84 மற்றும் முழுக்கரும்பு - ரூ.35 என மாவட்டத்தில் 3,47,701 குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3.93 கோடி செலவிடப்படுகிறது.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் மலா்விழி, நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், துணைத் தலைவா் ரமேஷ் கா்ணா, மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், துணைப்பதிவாளா்கள் சிவமணி, சுவேதா, வாா்டு உறுப்பினா் வினோத் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.