இலவச கண் சிகிச்சை முகாம்
மேல்விஷாரம் நெய்பா் வெல்பா் சங்கம் மற்றும் சி.எம்.சி இணைந்து நடத்திய இலவச கண்சிசிச்சை முகாம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் ( பொறுப்பு) எஸ்.குல்சாா் அஹமது தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கோ.பழனி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜபா் அஹமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். சங்கத் தலைவா் அமுதவாணி தமிழ்வாணன் வரவேற்றாா். மருத்துவா் ஹிட்லா் தலைமையிலான குழுவினா் நகராட்சி பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து மூக்கு கண்ணாடி வழங்கினா் . இதில் துப்புரவு ஆய்வாளா் ( பொறுப்பு) சத்தியமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.