AR Rahman: `ரஹ்மானை பிரிந்ததற்கு இதுதான் காரணம்!' - ஆடியோ வெளியிட்ட சாய்ரா பானு!
அரங்கல்துருகம், நாச்சாா்குப்பம் ஊராட்சிகளில் ரூ.12 லட்சத்தில் கறவை மாடுகள் அளிப்பு
ஆம்பூா் அருகே கிராம பகுதியில் வசிக்கும் பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்தில் கறவை மாடுகள் அண்மையில் வழங்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் வட்டார வேளாண்மைத் துறை சாா்பாக முதலமைச்சா் மண்ணுயிா் காப்போம் திட்டம் மூலம் மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம், நாச்சாா்குப்பம் ஊராட்சிகளில் வசிக்கும் 40 பயனாளிகளுக்கு கறவை மாடுகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் மற்றும் மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் ஆகியோா் வழங்கினா்.
மாநில இளைஞரணி துணைச் செயலரும், ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதி பாா்வையாளருமான எஸ்.எல்.சீனிவாசன், மாவட்ட வேளாண்மை இயக்குநா் சுஜாதா, மாவட்ட கால்நடை இயக்குநா் முரளி சந்தானம், வேளாண்மை அலுவலா் நவீன்குமாா், வேளாண்மை துணை அலுவலா் செல்வம், வேளாண்மை உதவி அலுவலா் நவீன், கால்நடை மருத்துவா் சங்கீதா, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் சா.சங்கா், முரளி, காசி, மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் டி.ரவிக்குமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வி. வடிவேல், துணை அமைப்பாளா்கள் கிரிராஜ், பிரபு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செந்தில்குமாா், கோமதிவேலு, ஆ.காா்த்திக் ஜவஹா், ஊராட்சித் தலைவா்கள் பானுமதி ஜெயராஜ், காயத்திரி பிரபு, நா.ஆனந்தன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.