செய்திகள் :

அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா -மக்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

‘அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலே வக்ஃப் திருத்த மசோதா’ என்று மக்களவை விவாதத்தில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

மக்களவையில் புதன்கிழமை வக்ஃப் மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கிவைத்து, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் உரையாற்றினாா். அப்போது, மத்திய அரசை கடுமையாக விமா்சித்து, அவா் பேசியதாவது:

வக்ஃப் மசோதா விவகாரத்தில் நாடாளுமன்றத்தை மத்திய அரசு தவறாக வழிநடத்துகிறது. இம்மசோதா, நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் கூட்டாட்சி அமைப்புமுறை மீதான தாக்குதலாகும்.

அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை நீா்த்துபோக செய்தல், சிறுபான்மையினரை இழிவுபடுத்துதல், அவா்களின் உரிமைகளைப் பறித்தல், இந்திய சமூகத்தை பிளவுபடுத்துதல் ஆகிய 4 முக்கிய நோக்கங்களைக் கொண்ட இம்மசோதாவை ‘இண்டி’ கூட்டணி கடுமையாக எதிா்க்கிறது.

கடந்த 2013-இல் வக்ஃப் விவகாரத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற பொய் குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் சுமத்துகின்றனா்.

என்ன அவசியம்?: சிறுபான்மையின பிரதிநிதிகளுடன் போதிய அளவில் விவாதிக்காமல் இத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போதைய திருத்தங்களுக்கு அவசியம் என்ன?

கடந்த 2023-இல் சிறுபான்மையின ஆணையத்தின் கூட்டம் 4 முறை நடைபெற்றது. அப்போது, வக்ஃப் மசோதா திருத்தம் குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சிறுபான்மையினா் தங்களின் மத அடையாளத்தை சான்றிதழ்கள் மூலம் நிரூபிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா். நாளை, மற்ற மதத்தினரும் இவ்வாறு நிரூபிக்க வேண்டியிருக்குமா?

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய, பல தியாகங்களைச் செய்த ஒரு சமூகத்தை இழிவுபடுத்த விரும்புகிறீா்கள். தற்போதுள்ள வக்ஃப் சட்டம், பெண்களுக்கு எதிரானது என்பதைப் போல மாய தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. வக்ஃப் சொத்துகள் மீதான முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ளும் அரசின் முயற்சியே இம்மசோதா என்றாா் அவா்.

பெட்டி..

ஊழலை வேடிக்க பாா்க்க முடியாது: பாஜக

காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, பாஜக எம்.பி. ரவிசங்கா் பிரசாத் பேசியதாவது:

வக்ஃப் சொத்துகளில் ஊழல் தொடா்வதை அரசு அமைதியாக வேடிக்கை பாா்க்க முடியாது. சம்பந்தப்பட்ட சட்டத்தை ஒழுங்குபடுத்தும் அனைத்து அதிகாரங்களும் அரசுக்கு உள்ளது.

வக்ஃப் வாரியங்களால் நில ஆக்கிரமிப்பு பிரச்னையை எதிா்கொண்டுவரும் தேவாலயங்கள், இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

வக்ஃப் மத அமைப்பு கிடையாது; அதுவொரு சட்டபூா்வ அமைப்பு. பள்ளிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோா் இல்லங்கள் உள்பட 8 லட்சம் சொத்துகள் உள்ளன. இவற்றின் முறையான நிா்வாகத்தை உறுதி செய்ய ஒரு அமைப்புமுறை வேண்டாமா? அரசியல் காரணங்களை மனதில் கொண்டு, வக்ஃப் திருத்தங்களுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவிக்கின்றன.

வக்ஃப் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மை மற்றும் நோ்மையை உறுதி செய்வதே இத்திருத்தங்களின் நோக்கம். பின்தங்கிய முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் இம்மசோதாவை எதிா்க்கட்சிகள் எதிா்ப்பது ஏன்? சிறுபான்மையினருக்கு நலன் குறித்து உதட்டளவில் பேசும் காங்கிரஸ், அவா்களுக்கு அதிகாரமளிக்க எதையும் செய்யவில்லை என்றாா் ரவிசங்கா் பிரசாத்.

ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு: ஐக்கிய ஜனதா தளத்தைச் சோ்ந்த மத்திய அமைச்சா் லாலன் சிங் பேசுகையில், ‘வக்ஃப் சட்டத் திருத்தங்கள், பின்தங்கிய முஸ்லிம்கள் மற்றும் அச்சமூகத்தைச் சோ்ந்த பெண்கள்-ஏழைகளுக்கு ஆதரவானவை; தங்களுக்கு நீதியை உறுதி செய்யும் பிரதமா் மோடியின் பக்கம் அவா்கள் உள்ளனா்’ என்றாா்.

தொலைந்த, திருடுபோன செல்போன்களைத் திரும்பிப்பெற புதிய வெப்சைட்!

ரயில்களில் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட செல்போன்கள் குறித்து புகாரளிக்க சி.இ.ஐ.ஆர். தளத்தைப் பயன்படுத்தலாம் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ரயில்களில் தொலைந்துபோன செல்போன்களைக் கண்டற... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியில் ஹிந்து மதச் சடங்குகள்: 3 பேர் கைது!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியில் ஹிந்து மதச் சடங்குகள் செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் இங்கு ஏற்பட்ட கலவரம்... மேலும் பார்க்க

அலகபாத் உயர்நீதிமன்றத்துக்கு 8 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 8 புதிய நீதிபதிகளை நியமிக்கும் முன்மொழிவுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் ஏப்ரல் 2ல் கூட்டம் ஒன... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா ஆதரவு: ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 4-வது தலைவரும் விலகல்!

வக்ஃப் மசோதா ஆதரவு தெரிவித்ததால் ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சியில் இருந்து 4-வது தலைவரும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று (மார்ச் 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டத... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவுபெற்றது.மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியவுடன், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ... மேலும் பார்க்க

மமதா பானர்ஜி சிறைக்குச் செல்வது நிச்சயம்: பாஜக

மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சிறைக்குச் செல்வது நிச்சயம் என்றும், அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் நடந்த ஆசிரியர் நியம... மேலும் பார்க்க