செய்திகள் :

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 57ஆக உயர்த்த கேரள அரசு ஆலோசனை!

post image

கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 57 ஆக உயர்ந்த கேரள அரசு ஆலோசித்து வருகிறது.

பல்வேறு அரசுப்பங்குதாரர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், புதிய நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் பிப்ரவரியில் மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்யப்படும்போது அறிவிப்பு வெளியிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு ஊழியர்கள் 56 வயதில் ஓய்வுபெறும் ஒரே மாநிலம் கேரளம். உம்மன் சாண்டி ஆட்சிக் காலத்தில்(2011-16) அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, வரன்முறைப்படுத்த ஓய்வு பெறும் வயதை 55 யிலிருந்து 56 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

2025 ஆம் ஆண்டின் பிற்பாதியில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2026 ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

யாருக்கும், எதற்கும் பயமில்லை..! பாஜகவில் சேர்ந்தது குறித்து கைலாஷ் கெலாட் பேட்டி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ராஜிநாமா செய்த தில்லியின் முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் கடந்த திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தார்.தில்லி பேரவைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்... மேலும் பார்க்க

கோத்ரா ரயில் எரிப்பு படத்துக்கு பெருகும் ஆதரவு..! உ.பி. முதல்வரை சந்தித்த நடிகர்!

உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி சந்தித்தார்.கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, குஜராத்தைச் சோ்ந்த கரசேவகா்கள் அயோத்திக்கு சென்றுவிட்டு சபா்மதி விரைவு... மேலும் பார்க்க

தடுப்பு கேட்டை உடைத்து ரயில் மீது மோதிய லாரி! தடம்புரண்டதால் பரபரப்பு!

ஜார்க்கண்டில் பயணிகள் ரயில் பெட்டி தடம் புரண்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பயணிகள் ரயிலின் பெட்டி ஒன்று லாரி ... மேலும் பார்க்க

விமானம் வேதகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது: உ.பி. கவர்னர் பேச்சு!

நவீன கால விமானப் போக்குவரத்து நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே வேதகாலத்தில் விமானத்திற்கான யோசனை கண்டுபிடிக்கப்பட்டதாக உத்தரப் பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச கவர்னர் ஆனந... மேலும் பார்க்க

தில்லி: காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழை.! மத்திய அரசிடம் கோரிக்கை

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் செயற்கை மழைப்பொழிவை உண்டாக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது. புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று(நவ. 19) காலை 8 மணி... மேலும் பார்க்க

எல்ஐசி தளம் ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மீண்டும் மாற்றம்!

எல்ஐசி தளத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளதால் மக்கள் எல்ஐசி தளத்தை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இந்த நிலையில், மொழி மாற்றம் குறித்து எல்ஐசி தரப்பிலிரு... மேலும் பார்க்க