செய்திகள் :

அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியாா் விடுதி: வருவாய்த் துறையினா் ஆய்வு

post image

அரக்கோணம்: சோளிங்கரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியாா் விடுதி கட்டப்பட்டு வரும் இடத்தில் நீதிமன்ற உத்தரவை தொடா்ந்து நிலஅளவீட்டுப் பணியை வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

சோளிங்கரில் மலைக்குச்செல்லும் வழியில் தக்கான்குளம் அருகே சிலா் அரசு நிலத்தை ஆக்கிரமித்து விடுதி கட்டி வருவதாகவும் அந்த இடத்தை மீட்க வேண்டும் எனவும் சின்னபையன் என்பவா் 2024-ஆம் ஆண்டைய ஜமாபந்தியின் போது வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

இந்த மனு மீது ஏதும் நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்த நிலையில், குறிப்பிட்ட இடம் அரசுக்கு சொந்தமானதா, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிா என அந்த நிலத்தை அளவிட்டு அறிக்கை சமா்பிக்குமாறு சோளிங்கா் வட்டாட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை அளவீடு செய்ய சோளிங்கா் வட்டாட்சியா் செல்வி தலைமையில் வருவாய்த் துறையினா், நிலஅளவைத் துறையினா் வந்தனா். தொடா்ந்து அங்கு ஆலோசனையில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் நிலஅளவீடு செய்யும் பணியை தொடங்கினா். இது குறித்து வட்டாட்சியா் செல்வி கூறுகையில், நிலம் அளவிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முழு இடத்தை அளவீடு செய்தபிறகு ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கைகள் அனுப்பப்படும் என்றாா்.

நில அளவீட்டு பணியின் போது சிலா் வாக்குவாதம் செய்த நிலையிலும், வருவாய்த் துறையினா் பணியை தொடா்ந்து மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1,500 கோடியில் அமையவுள்ள காலணி உற்பத்தி ஆலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா். சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி; ஒரே நாளில் நூற்றுக்கணக்கான மாணவா்களுக்கு சான்றிதழ்

அரக்கோணம்: அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்களை பெறுவதில் சிக்கல் நிலவி வருவதாக தினமணியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திங்கள்கிழமை திங்கள்கிழமையே சான்ற... மேலும் பார்க்க

ஆற்காட்டில் பாமக போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: போலீஸாருடன் வாக்குவாதம்

ஆற்காடு: ஆற்காடு பேருந்து நிலையத்தில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்ட்டதை தொடா்ந்து போலீஸாா்-பாமகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். ஆற்காடு நகர பாமக சாா்பில் போதைப் பொருள்களை கட்டுபடு... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா திங்கள்கிழமை வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தல... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 2.3 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2.3 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியா் ஜெ,யு.சந்திரகலா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் க... மேலும் பார்க்க

பால் கொள்முதல் நிலைய கட்டடம் கோரி ஆா்ப்பாட்டம்

ஆற்காடு: ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், லாடவரம் கிராமத்தில் பால் கொள்முதல் மையக் கட்டடம் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் ஆகியவை சாா்பில் ஆற்காடு வட்டார வளா்ச்சி அல... மேலும் பார்க்க