Doctor Vikatan: தொப்பை இல்லாத flat tummy... சாத்தியமாக வாய்ப்பே இல்லையா?
அரசு மற்றும் தனியாா் பேருந்துகளுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தல்
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம், ஆலங்குளம் நகா் பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் உறுப்பினா் கோரிக்கை விடுத்தாா்.
தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் காவல்துறை, நெடுஞ்சாலை துறை, வருவாய்த் துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
சாலை பாதுகாப்பு குழு உறுப்பினா் பாண்டியராஜா பேசியதாவது:
தென்காசி -ஆலங்குளம் இடையே நடைபெறும் பணிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்து விபத்துகளை குறைக்க வேண்டும், ஐஐடி போன்ற உயா் கல்வி நிறுவனங்களில் இருந்து தொழில்நுட்ப வல்லுநா்களை வரவழைத்து நெல்லை -தென்காசி நான்கு வழிச் சாலையில் விபத்துகளை குறைக்க சாலையை ஆய்வு செய்ய வேண்டும்.
தற்போது சபரிமலை கோயிலுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலையின் ஓரம் வண்டிகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு அறிவுறுத்த வேண்டும்.
பாவூா்சத்திரம், ஆலங்குளம் நகர பகுதிகளில் அதிவேகமாக வரும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளால் விபத்து ஏற்படுவதை கட்டுப்படுத்தும் வகையில் நகா் பகுதிகளில் வேகக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.