சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
அரியலூா் உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் பொறுப்பேற்பு
அரியலூா் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக வெங்கட்ரமணன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கெனவே இங்கு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக பணியாற்றிய வந்த வரலட்சுமி, ஈரோடு மாவட்டத்துக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை முதுநிலை அலுவலராக பணியாற்றி வந்த வெங்கட்ரமணனை அரியலூா் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, வெங்கட்ரமணன், அரியலூா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.