தென்காசி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு
அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார்!
கன்னட நடிகர் சிவராஜ்குமார் அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார். டிச.24ஆம் தேதி புளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் கழகத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெறவிருக்கிறது.
கன்னட சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் புனித் ராஜ்குமாரின் சகோதரருமான இவர், கன்னட மக்களிடம் மிகுதியான மதிப்புடன் இருக்கிறார்.
ஜெயிலர் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்த சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றார். இதனால், தமிழில் வாய்ப்புகள் அவரை நோக்கிச் சென்றன.
இந்த நிலையில், அமெரிக்கா செல்வதற்காக சிவராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
நம்பிக்கையுடன் இருக்கிறேன்
விமான நிலையத்துக்கு செல்வதற்கு முன்பு சிவராஜ்குமார் பேசியதாவது:
இந்தச் செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்தாததுக்கு மிக்க நன்றி. நடிகர்கள், ரசிகர்களிடமிருந்து எனக்கு வாழ்த்துகள் வந்ததுக்கு எனக்கு மகிழ்ச்சி.
பரிசோதனையில் முக்கியமான காரணிகள் எல்லாம் நல்ல விதமாகவே இருக்கின்றன. திடீரென அறுவைச் சிகிச்சைக்காக செல்வது வீட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும். எனது குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்களை பார்க்கும்போது எனக்குமே சிறிது உணர்ச்சிவசப்படத் தோன்றுகிறது. அவர்களைப் பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது. மற்றபடி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றார்.
அமெரிக்கா சென்றடைந்ததாக ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் விடியோவை பதிவிட்டுள்ளார்கள்.