அலிபிரி பாத மண்டபம் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்
திருப்பதி: திருப்பதி, அலிபிரி பாத மண்டபத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோயிலுடன் இணைக்கப்பட்ட ஸ்ரீ கோதா அம்மா கோயிலில் திங்கட்கிழமை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
திருப்பதி அலிபிரி பாதாளு மண்டபத்தில் உள்ள இக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் செய்து 12 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு திங்கட்கிழமை அஷ்டபந்தன சம்ப்ரோஷணம் நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை யாகசாலையில் வேத சடங்குகள் மற்றும் மகா பூா்ணாஹுதி செய்யப்பட்டது. கும்ப பிரதக்ஷணம் காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரையிலும், காலவாஹனம் மற்றும் அக்ஷத ரோஹன மகா சம்ப்ரோக்ஷணம் காலை 9:45 மணி முதல் 10:25 மணி வரையிலும் நடைபெற்றது.
கோயிலின் முக மண்டபத்தில் ஒரு மாதிரி கோயில் அமைக்கப்பட்டு, கருவறையில் மூல தெய்வங்களின் சிலைகள், கலசங்கள் நிறுவப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் கோயில் துணை நிா்வாக அலுவலா் சாந்தி, ருத்விகுலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.