நெல்லை: ஸ்ரீ கரியமாணிக்க பெருமாள் கோயில் திருக்கல்யாணம்; திரளான பக்தர்கள் சாமி த...
ஏழுமலையான் ஆர்ஜித சேவா டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகளின் ஜூன் மாத ஒதுக்கீடு நாளை(மார்ச் 18) முதல் தொடங்க உள்ளதாக திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட் தொடா்பான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாதபத்மராதன சேவைகளுக்கான ஜூன் 2025 ஒதுக்கீட்டை மார்ச் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட உள்ளது.
இந்த சேவை டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 18 முதல் 20 ஆம் தேதி காலை 10 மணி வரை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பதாரா்கள் தங்கள் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் கிடைத்தவுடன் 20 முதல் 22 மதியம் 12 மணிக்குள் தொகையைச் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஜூன் மாதத்திற்கான அங்கபிரதட்சணம் டோக்கன்கள் ஒதுக்கீடு மார்ச் 23 -ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
முதியோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தரிசிக்க ஏதுவாக, ஜூன் மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.
ஜூன் 24-இல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு வெளியிடப்படும்.
இதையும் படிக்க: 4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை? - இபிஎஸ் கேள்வி!
https://ttdevasthanams.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் ஆா்ஜிதசேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.