செய்திகள் :

அல்கராஸ், ஆண்ட்ரீவா முன்னேற்றம்

post image

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் காலிறுதிச் சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.

ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், நடப்பு சாம்பியனான அல்கராஸ் 7-6 (10/8), 6-3, 4-6, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 13-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டனை போராடி வீழ்த்தினாா். காலிறுதியில் அவா், மற்றொரு அமெரிக்கரான டாமி பாலை சந்திக்கிறாா்.

8-ஆம் இடத்திலிருக்கும் முசெத்தி 7-5, 3-6, 6-3, 6-2 என்ற செட்களில், 10-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூனை வெளியேற்றினாா். அடுத்து அவா், அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோவை எதிா்கொள்கிறாா். 15-ஆம் இடத்திலிருக்கும் டியாஃபோ முந்தைய சுற்றில், 6-3, 6-4, 7-6 (7/4) என்ற செட்களில் ஜொ்மனியின் டேனியல் அல்ட்மேயரை தோற்கடித்தாா்.

பெகுலா அதிா்ச்சி: மகளிா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா 6-3, 4-6, 4-6 என்ற செட்களில் பிரான்ஸின் லூயிஸ் பாய்சனிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

2-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-0, 7-5 என, 20-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை எளிதில் வெளியேற்றினாா். 6-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா 6-3, 7-5 என்ற நோ் செட்களில், 17-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினாவை சாய்த்தாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 7-5 என சக நாட்டவரான ஹேலி பாப்டிஸ்டேவை வென்றாா்.

விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?

நடிகர் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் விமானப்படை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா,... மேலும் பார்க்க

அதிர்ஷ்டம் யாருக்கு இந்த வாரம்: வார பலன்கள்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 6 - 12) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)இடையூறுகளைத் தகர்... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்கு தொடரச் சொன்னார்கள்: தியாகராஜன்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் தன் பட பாடலைப் படக்குழுவினர் கேட்காமல் பயன்படுத்தியதாகத் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: சிலியை வீழ்த்தியது ஆர்ஜென்டீனா!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா சிலியை வென்றது.2026 கால்பந்து உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. தென்னமெரிக்காவில் ஆர்ஜென்டீனாவும் ... மேலும் பார்க்க

யமால், பெட்ரி அசத்தல்: பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு தகுதி!

நேஷன்ல் லீக் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் 5-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தியது. ஜெர்மனியில் உள்ள எம்பிஎச் அரினா திடலில் நடைபெற்ற நேஷன்ல் லீக் அரையிறுதியில் முதல் பாதியில் ஸ்பெயின் 22, 25ஆவது ந... மேலும் பார்க்க

தக் லைஃப் முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம... மேலும் பார்க்க