அல்லு அர்ஜுனின் பாதுகாவலர் கைது!
சந்தியா திரையரங்கு சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது பெண் பலியான விவகாரத்தில் ஹைதராபாத் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தியா திரையரங்கு உரிமையாளர், மேலாளர் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் முன் அனுமதியின்றி வந்தது நெரிசலுக்கு காரணம் என்று அவரையும் கைது செய்தனர். பின்னர், உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
இதையும் படிக்க : 3 மணிநேர விசாரணைக்குப் பிறகு வீடு திரும்பிய அல்லு அர்ஜுன்!
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் திரையரங்குக்கு வந்தபோது, அவரின் பாதுகாப்பு பணிக்கு அந்தோணி என்பவர் மூலம் பாதுகாவலர்கள் ஏற்பாட்டு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பாதுகாவலர்கள் ரசிகர்களை தள்ளியதே தள்ளுமுள்ளு ஏற்பட காரணமாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததால், அந்தோணியை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவரை சந்தியா திரையரங்குக்கு அழைத்துச் சென்று நடந்ததை செய்து காட்டச் சொல்லி விடியோ பதிவு செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.