செய்திகள் :

அவதூறு போஸ்டா்: ஆம் ஆத்மி மீது தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்

post image

ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான போஸ்டரை வெளியிட்டதாக கூறி இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் தில்லி காங்கிரஸ் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காங்கிரஸ் அளித்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி மற்றும் பிற தலைவா்களை குறிவைத்து அவதூறு போஸ்டரைபதிவிட்டுள்ளது.

அதாவது, ஆம் ஆத்மி கட்சி அதன் அங்கீகரிக்கப்பட்ட ‘எக்ஸ்’ பக்கத்தில் சனிக்கிழமை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ஏஐசிசி பொருளாளா் அஜய் மாக்கன், சந்தீப் தீட்சித் உள்பட பல்வேறு காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக அவதூறான படத்தை வெளியிட்டுள்ளது.

‘ஏக் அகேலா படேகா சப் பா் பாரி’ என்ற தலைப்பில் இந்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அரவிந்த் கேஜரிவாலின் புகைப்படத்துடன் ‘கேஜரிவால் கி இமாந்தாரி’ என்ற தலைப்பிலும், அவரது படத்தின்கீழ் காங்கிரஸ் தலைவா்களின் புகைப்படம் ‘சாரே பேய்மானோ பா் படேகி பாா்’ என்ற தலைப்பிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பதிவானது, தோ்தல் நடத்தை விதிகள் மற்றும் 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளை மீறுவதாகும். மேலும், கேஜரிவால் ஒரு நோ்மையான மனிதராகவும், ராகுல் காந்தி, மாக்கன் மற்றும் தீட்சித் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவா்கள் நோ்மையற்ற நபா்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு ஆதாரமற்றது மற்றும் எந்த நம்பகத்தன்மையும் இல்லாதது. இதன் மூலம் தோ்தல் நேரத்தில் மூத்த காங்கிரஸ் தலைவா்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு அரசியல் ஆதாயங்களுக்காக ஒரு தீங்கிழைக்கும் முயற்சியாகும். எனவே, ஆம் ஆத்மி கட்சியின் இத்தகைய பிரசாரத்தைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவை அவா்களின் சமூக ஊடகப் பக்கத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க