செய்திகள் :

``அவர் எனக்கு மகனைப்போல; நான் அவருக்கு சித்தப்பா..'' - நடிகர் சிவராஜ்குமாரை வாழ்த்திய கமல்

post image

 ‘தக் லைஃப்’  இசை வெளியீட்டு விழாவில் எதிரில் அமர்ந்திருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நோக்கி பேசிய கமல்ஹாசன், ‘‘உங்கள் மொழி கன்னடம், தமிழிலிருந்து பிறந்தது’’ என்று சொன்னார். இதற்கு கர்நாடகாவில் கிளம்பிய கடும் எதிர்ப்பு, கமலின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை அந்த மாநிலத்தில் திரையிட முடியாத அளவுக்கு சிக்கல்கள் உருவானதுனது.

இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் சர்ச்சைகளைக் கிளப்பினர். இருப்பினும் கமல் தான் கூறியது சரி என்று மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார்.

கமல், சிவராஜ்குமார்

நடிகர் சிவராஜ் குமாரும், தன் மீதுள்ள அன்பின் மிகுதியால் கமல் அப்படி பேசியாகவும், "கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?" என்றும் கமலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நடிகர் சிவராஜ் குமார் திரைத்துறையில் 40-வது ஆண்டை தொடங்குவதற்கு வாழ்த்துத் தெரிவித்துப் பேசியிருக்கிறார் கமல்.

இதுகுறித்து காணொலி மூலம் பேசியிருக்கும் கமல், "சிவராஜ்குமார் எனக்கு ஒரு மகனைப்போல; நான் அவருக்கு சித்தப்பா. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டின அன்பு எதிர்பாராத அன்பு.

கமல்

சிவான்னாவை பொறுத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடிச்சுன்னு எனக்கு தெரியல. இன்னிக்கு மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக்கொண்டிருக்கிற விஷயம்... இனியும் சாதிக்கக்கூடிய விஷயம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது." என்று வாழ்த்திப் பேசியிருக்கிறார்.

Rashmika: ``இந்தப் புகைப்படம் மட்டும்தான் என்னிடம் இருக்கிறது'' - தனுஷ் குறித்து ரஷ்மிகா நெகிழ்ச்சி

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த ஜூன் 20-ம் தேதி ரிலீஸ் ஆன குபேரா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள... மேலும் பார்க்க

Coolie: "வேற சாங்... வேற வைப்..." - வெளியாகிறது சிட்டுக்கு பாடல்

ரஜினி காந்த் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் சிட்டுக்கு பாடல் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரஜினியின் 50 ஆண்டு கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் 'கூலி' திரைப்படம் ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க

Vijay: 15 நாள் அவர் கூட காம்பினேஷன் சீன் இருந்துச்சு; 'ஜன நாயகன்' பட அனுபவம் பகிரும் அருண்

'தளபதி 69'ல ஒரு கேரக்டர் இருக்கு நீங்க உடனடியா வினோத் சார் ஆபீஸ்க்கு வாங்க'னு போன் வந்தப்ப நம்மாளுங்க யாரோ ப்ராங்க் பண்ணுவாங்கனு நினைச்சுக்கிட்டேதான் போனேன். ஆனா நிஜமாகவே வினோத் சார் முன்னாடி போய் உட்... மேலும் பார்க்க

ஹிப்ஹாப் ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? பதில் சொல்லி கான்செர்ட் Tickets Win பண்ணுங்க!

2K kids-ன் மானசீக நாயகனான ஹிப்ஹாப் தமிழா ஆதி குறித்து உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா? சிம்பிளான இந்த ஐந்து கேள்விகளுக்கு பதில் அளியுங்கள் மதுரையில் நடக்க இருக்கும் Multi Talented artist Hiphop Tamizha'... மேலும் பார்க்க

Dhanush: 'இனி நான் அதிகம் பேசப்போவதில்லை..!' - 'குபேரா' வெற்றி விழாவில் பேசிய தனுஷ் பேசியது என்ன?

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி 'குபேரா'திரைப்படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் ப... மேலும் பார்க்க

Jana Nayagan: "இதுதான் உங்க கடைசி படமா?" - மமிதா பைஜுவின் கேள்விக்கு விஜய்யின் பதில் என்ன?

விஜய்க்கு 51-வது பிறந்தநாள் இன்று. விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' படத்தின் முன்னோட்ட வீடியோ விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியிருக்கிறது. Jana Nayagan - Vijay அ. வினோத் இயக்கும் இப்படத... மேலும் பார்க்க