செய்திகள் :

ராயல் என்ஃபீல்ட் புதிய எலக்ட்ரிக் மாடல்கள்: சி6, எஸ்6 சோதனை ஓட்டம்!

post image

ராயல் என்ஃபீல்ட் மின்சார மாடல் பைக்குகள் சோதனை ஓட்டம் லடாக்கில் நடைபெற்றுள்ளது. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஃப்ளையிங் ஃப்ளீ சி6 மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள எஸ்6 மாடல் பைக்குகள் விரைவில் சந்தைக்கு வரவுள்ள நிலையில், இந்த சோதனை உயர்ந்த மலைப்பாங்கான பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது.

ஃப்ளையிங் ஃப்ளீ சி6 அடுத்தாண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு வரவுள்ளதை ராயல் என்ஃபீல்ட் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக எஸ்6 மாடல் பைக்குகள் சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃப்ளையிங் ஃப்ளீ சி6 பற்றிய விவரங்கள் ஏற்கெனவே வெளிப்பட்டுவிட்ட நிலையில், புதியதாக அறிமுகமாகியுள்ள ஃப்ளையிங் ஃப்ளீ எஸ்6 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க:ராயல் என்ஃபீல்டின் முதல் எலக்ட்ரிக் பைக் 'ஃப்ளையிங் ஃப்ளீ' அறிமுகம்!

ஃப்ளையிங் ஃப்ளீ எஸ்6 பைக்குகளில் சி6 மாடலில் கொடுக்கப்பட்டுள்ளதை போல இல்லாமல், இதில் பெல்ட் ட்ரைவுக்கு பதிலாக செயின் ட்ரைவ் அமைந்துள்ளது. அல்லாய் ரக வீல்களுக்கு பதிலாக ஸ்போக் மாடல் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்வெர்டெட் டெலெஸ்கோபிக் ஃபோர்க் உள்ளது.

இதன் மின்சார பேட்டரியின் திறன் குறித்து இன்னும் முழு விவரம் வெளியிடப்படவில்லை. எனினும், முதல்கட்ட தரவுகளின்படி, பெட்ரோல் மாடல் பைக்குகளில் 125 - 100 சிசி என்ஜின் திறனுடன் வரும் பைக்குகளுக்கு இணையான சக்தியை இந்த எலக்ட்ரிக் மாடல் வழங்கும் என்று கூறப்படுகிறது.

நெடுந்தூரம் செல்லும் வகையில் அதிக திறனுடன் கூடிய பேட்டரி பொருத்தப்பட்ட பைக்குகளாக இந்த மாடல் இருக்காது என்பதால், குறைந்து தூர பயணத்துக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ. 4.50 லட்சத்திலிருந்து ஆரம்பமாகும் என்றும் சொல்லப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சரிந்து முடிந்த பங்குச் சந்தை வர்த்தகம்!

புதுதில்லி: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் வெகுவாக உயர்ந்ததையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் எண்ணெய் நிறுவன பங்குகள் சரிந்து முடிந்தன... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 55 காசுகள் சரிந்து ரூ.86.07 ஆக முடிவு!

மும்பை: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்தும், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியிலும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் உறுதியான டால... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 573.38 புள்ளிகளுடனும், நிஃப்டி 169.60 புள்ளிகளுடன் சரிந்து முடிவு!

மும்பை: ஈரான் மீதான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் ஒரு சிறிய மீட்சிக்கு பிறகு சரிந்து முடிந்தன... மேலும் பார்க்க

ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64% பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

புதுதில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நேற்று (ஜூன் 12) ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவிகித பங்குகளை விற்ற நிலையில், அதனை எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ரூ.7,703 கோடிக்கு வாங்கியுள்ளதாக... மேலும் பார்க்க

பழசுக்கு புதுசு... ஹூண்டாய் அல்கஸார் கார்ப்பரேட் அறிமுகம்!

ஹூண்டாயின் அல்கஸாரில் புதிதாக கார்ப்பரேட் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது.ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா ரக கார்கள், 2021 ஆம் ஆண்டில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதால், கிரெட்டாவின் அல்கஸார் காரை நிற... மேலும் பார்க்க

பங்குச் சந்தை கடும் சரிவுடன் வர்த்தகம்!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் காலை 9.30 மணி நிலவரப்படி, 867 புள்ளிகள் சரிந்து 80,824.98 ஆக வர்த்த... மேலும் பார்க்க