செய்திகள் :

அஸ்ஸாமில் அரசுத் தேர்வால் இணைய சேவை முடக்கம்!

post image

அஸ்ஸாமில் நடைபெறவுள்ள அரசுத் தேர்வையொட்டி, அக். 27 ஆம் தேதியில் மாநிலம் முழுவதும் இணையச் சேவை முடுக்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அஸ்ஸாமில் வரும் ஞாயிற்றுக்கிழமையில் (அக். 27) 28 மாவட்டங்களில் கிரேட் 4 பதவிகளுக்கான தேர்வை இரண்டு வேளைகளில் நடைபெறவுள்ளது.

1,484 மையங்களில் காலை 9 மணி முதல் 11.30 மணிவரையில் ஹெச்.எஸ்.எல்.சி. பதவிகளுக்கான தேர்வு நடைபெறும்; இந்த தேர்வுக்கு 8,27,130 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 808 மையங்களில் பிற்பகல் 1.30 மணி முதல் 4 மணிவரையில் எட்டாம் நிலை பதவிகளுக்கான தேர்வு நடைபெறும்; இந்த தேர்வுக்கு 5,52,002 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படிக்க:காஸா: இஸ்ரேல் தாக்குதலால் 42,800 பாலஸ்தீனர்கள் பலி!

இந்த நிலையில், தேர்வு எழுதவிருப்பவர்கள் எந்தவிதமான ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரையில் அனைத்து வகையான இணைய சேவைகளும் முடுக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தேர்வு மையங்களில் மொபைல் போன் போன்ற சாதனங்களில் இணைய சேவை மூலம் நியாயமற்ற முறையில் தேர்வில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தெரியுமா சேதி...?

கேரள மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து, பினராயி விஜயன் அமைச்சரவையில் சமூகநீதித் துறையையும் கையாள்கிறாா். ஆங்கில இலக்கியத்தில் முனைவா் பட்டம் பெற்ற இந்த தில்லி ஜவாஹா்லால் நேரு சா்வகலாசாலையின... மேலும் பார்க்க

விமானத்தில் இருமுடி கொண்டுசெல்ல அனுமதி

சபரிமலை செல்லும் பக்தா்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது தேங்காய், நெய் ஆகியவை அடங்கிய இருமுடி பைகளை தங்களுடன் எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்) அனுமதி அளித்துள்ளது. 2025 ஜன... மேலும் பார்க்க

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சலூன் கடையில் சவரம் செய்யும்போது கடைக்காரரான அஜித்துடன் உரையாடல் குறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடியோவில் ``நாள் முழுவதும் உழ... மேலும் பார்க்க

காங்கிரஸ் - பாஜக மோதலில் பாஜக தொண்டர் பலி!

அஸ்ஸாமில் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதலில் பாஜக தொண்டர் பலியானார்.அஸ்ஸாமில் சமாகுரி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்காக, வியாழக்கிழமையில் (அக். 24) காங்கிரஸ் வேட்பாளர் தன்சில்... மேலும் பார்க்க

மும்பையில் ரூ. 138 கோடி நகைகள் பறிமுதல்! போலீஸார் விசாரணை!

மகாராஷ்டிரத்தில் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 138 கோடியிலான தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதத்தில் சட்ட... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற புதுமணப் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

மத்தியப் பிரதேசத்தில் சுற்றுலா புதுமணத் தம்பதியரைத் தாக்கி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், புதிதாய் திருமணமான தம்ப... மேலும் பார்க்க