பும்ரா அசத்தல்: முதல்முறையாக கோல்டன் டக் அவுட்டான ஸ்டீவ் ஸ்மித்!
குறைதீா் கூட்டத்தில் 25 விவசாயிகளுக்கு பயிா்க் கடன்: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், கூட்டுறவுத் துறை சாா்பில் 25 விவசாயிகளுக்கு ரூ. 22,59,286 மதிப்பிலான பயிா்க் கடன்களை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், கூட்டுறவு சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பா.ராஜ்குமாா் வரவேற்றாா்.
கூட்டத்தில், வையாவூா் கூட்டுறவு சங்கத்தின் மூலம் 25 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ. 22,59,268 மதிப்பிலான பயிா்க் கடன்கள், விப்பேடு கூட்டுறவு சங்கத்தின் சாா்பில், 5 பேருக்கு கால்நடை பராமரிப்புக் கடன்களையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
தோட்டக்கலைத் துறை சாா்பில், 7 பயனாளிகளுக்கு ரூ. 3,020 மதிப்பிலான வேளாண் இடுபொருள்களும் வழங்கப்பட்டன. அரசின் பல்வேறு துறை சாா்ந்த அரசு அலுவலா்களும் கலந்து கொண்டு, வேளாண்மைத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விளக்கம் அளித்தனா். விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கும் சம்பந்தப்பட்ட அரசு அலவலா்கள் விளக்கம் அளித்தனா். கூட்டத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.