செய்திகள் :

ஆக்ராவில் சிலை கரைப்பின்போது நீரில் மூழ்கி இருபர் பலி, 6 பேர் மாயம்

post image

ஆக்ரா சிலை கரைக்கும் போது ஆற்று நீரில் மூழ்கி 2 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டத்தில் உள்ள உதங்கன் ஆற்றில் வியாழக்கிழமை சிலை கரைக்கும் போது நீரில் மூழ்கி 2 பேர் பலியானதோடு ஆறு பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைராகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும் நிகழ்வின்போது 9 பேர் ஆழமான நீரில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.

அதில், ஒருவரை உள்ளூர்வாசிகள் மீட்டனர். அதேநேரத்தில் ககன் (26) மற்றும் ஓம்பல் (32) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினர். காணாமல் போன ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக ஆக்ரா மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மல்லப்பா பங்காரி தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்கிறது! காஸாவுக்கான உதவிகளையும் தடுத்து நிறுத்தும் இஸ்ரேல்!!

உள்ளூர் டைவர்ஸ், காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை உறுப்பினர்கள் அடங்கிய குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. சிலை கரைப்பதற்கு நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தை தவிர்த்து அவர்கள் அங்கீகரிக்கப்படாத இடத்தைத் தேர்ந்தெடுத்ததாக மாவட்ட ஆட்சியர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே இச்சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்தார்.

The incident took place in the Khairagarh area when nine individuals reportedly ventured into deep water during the ritual.

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிரபல பாடகர் ஸுபீன் கர்க்கின் மரணத்தில், கைது செய்யப்பட்ட அவரது சிங்கப்பூர் விழா ஏற்பாட்டாளர் ஷியாம்கானு மஹாந்தா இந்த விவகாரத்தில் தான் பலிகடா ஆக்கப்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்... மேலும் பார்க்க

புகழ்பெற்ற பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ் காலமானார்!

பெங்களூருவில் புகழ்பெற்ற பத்திரிகையாளரும் எழுத்தாளருமான டி.ஜே.எஸ். ஜார்ஜ் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 97.Legendary journalist and author TJS George passed away... மேலும் பார்க்க

‘நிர்வாணப் படத்தை அனுப்பு’: அக்‌ஷய் குமார் மகளிடம் ஆன்லைன் விளையாட்டில் அத்துமீறல்!

நடிகர் அக்‌ஷய் குமாரின் மகளிடம் ஆடைகளைக் களைந்துவிட்டு இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றச் சொல்லி இணையவழியில் சில மர்ம நபர்கள் எல்லை மீறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனில் ... மேலும் பார்க்க

சமூக ஊடக ரீல்ஸ் மோகம்: தண்டவாளத்தில் நின்ற சிறார்கள் வந்தே பாரத் ரயில் மோதி பலி!

சமூக ஊடக ரீல்ஸ் மோகம் இளைஞர்களின் உயிருக்கு எமனாக மாறி வருவதை பிகாரில் இன்று(அக். 3) நடந்த கோர விபத்து நமக்கு உணர்த்துகிறது. பிகாரில் பூர்ணியா அருகே 14 முதல் 19 வயதுக்குள்பட்ட பதின்பருவ சிறார்கள் ஐவர்... மேலும் பார்க்க

பிகாரில் வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலி, ஒருவர் காயம்

பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் புர்னியா மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது வந்தே பாரத் ரயில் மோதி 4 ப... மேலும் பார்க்க

பால்வளத் துறையில் 70% வளர்ச்சி: அமித் ஷா பாராட்டு!

பால்வளத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், இந்தக் காலகட்டத்தில் 70 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மேலும் பார்க்க