``ஆறு மாசமா கிணத்தைக் காணோம் சார்..." - வடிவேலு பாணியில் விவசாயி புகார்! - என்ன ...
ஆட்சி அதிகாரத்தில் ஷிண்டே இடம்பெறுவார் என நம்புகிறேன்: ஃபட்னவீஸ்
மகாராஷ்டிர ஆட்சி அதிகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே இடம்பெறுவார் என்று நம்புவதாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேவேதிர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர முதல்வராக (சட்டப்பேரவை பாஜக தலைவராக) தேவேந்திர ஃபட்னவீஸ் ஒருமனதாக இன்று காலை தேர்வு செய்யப்பட்டார்.
தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகத் தோ்வு செய்யப்பட்ட நிலையில், கூட்டணித் தலைவா்களான ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையும் படிக்க : பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் ஃபட்னவீஸ் பேசியதாவது:
“நாளை மாலை 5.30 மணிக்கு பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மகாயுதி கூட்டணியின் முதல்வராக நான் பதவியேற்கவுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
முதல்வர், துணை முதல்வர்கள் என்பதெல்லாம் ஒரு பதவி மட்டுமே. நாங்கள் ஒன்றிணைந்து மகாராஷ்டிர மக்களுக்காக உழைப்போம். அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் குறித்து விரைவில் பேசி முடிவெடுப்போம்.
நான் ஷிண்டேவை நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அதிகாரத்தில் இடம்பெற வலியுறுத்தியுள்ளேன். அவர் கண்டிப்பாக அரசின் அங்கமாக இருக்க வேண்டும். அவர் இருப்பார் என்று முழு நம்பிக்கை உள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” என்றார்.