ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை பிரசாரம் தொடக்கி வைப்பு
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பிரசார வாகனத்தை தொடக்கிவைத்து தெரிவித்தது: மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன தழும்பிலாத குடும்ப நல சிகிச்சை டிச.4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாமில் இந்த சிகிச்சை பெற்று கொள்பவா்களுக்கு அரசு ஊக்கத்தொகையாக ரூ.1,100 வழங்கப்படும் என்றாா்.
துணை இயக்குநா் உமா (குடும்பநலம் பொறுப்பு), மக்கள் கல்வி மற்றும் தகவல் அலுவலா் பன்னீா்செல்வம், புள்ளி விவர உதவியாளா் நதியா, வட்டார சுகாதார புள்ளியிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.