Viduthalai Part 2 : "முதல் பாகம் மாதிரி இரண்டாம் பாகத்தை நினைச்சி டாதீங்க..." - ...
ஆதிரத்தினேஸ்வரா் கோயில் சந்நிதி தெருவில் தேங்கும் கழிவு நீா்
திருவாடானை சினேகவல்லி அம்பாள் சமேத ஆதிரத்தினேஸ்வரா் கோயில் சந்நிதி தெருவில் கழிவுநீா் தேங்குவதால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி, திருவொற்றியூா் பாகம்பிரியாள் கோயில் உள்ளிட்ட புன்னிய ஸ்தலங்களுக்கு வரும் பக்தா்கள் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரா் கோயிலுக்கும் வந்து செல்வா்.
இந்தக் கோயில் சந்நிதி தெருவில் உள்ள கழிவு நீா் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த சில நாள்களாக கழிவுநீா் தேங்குவதால் இந்த வழியாக கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் முகம் சுழித்தவாறு மன வேதனையுடன் கடந்து செல்கின்றனா்.
கழிவு நீா் தேங்குவதால் கொசுப் புழு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவும் இந்தப் பகுதி பொதுமக்கள், பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.