செய்திகள் :

ஆந்திரம்: 26 மண்டலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

post image

ஆந்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் இன்று(ஏப்ரல் 1) 26 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக அதிகப்படியான வெய்யில் கொளுத்திவரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று 26 மண்டலங்களில் வெப்பம் கொளுத்தும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

26 மண்டலங்களில் விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவற்டடங்களில் தலா ஆறு மண்டலங்களும், அல்லூரி சீதாராமராஜுவில் 3 மண்டலங்களும், கிழக்கு கோதாவரியில் ஒன்று, பார்வதிபுரம் மன்யத்தில் 10 மண்டலங்கள் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர் ஆர். கூர்மநாத் தெரிவித்தார்.

நந்தியாலா மாவட்டத்தில் கோஸ்பாடுகவில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதைத் தொடர்ந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள கம்மரசேடுவில் 40.2 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளன. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நாகசமுத்திரத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தெலங்கானா அரசு பல்கலைக்கழக நிலத்தை அபகரிப்பதாகக் கூறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என... மேலும் பார்க்க

அதிஷி, சஞ்சய் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்குத் த... மேலும் பார்க்க

சொத்து விவரங்கள்: பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்

புது தில்லி: தங்களது சொத்து விவரங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கவும், அதனை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றவும் நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் பார்க்க

சமைக்காத இறைச்சி சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி: ஆந்திரத்தில் அதிர்ச்சி!

ஆந்திரத்தில் சமைக்காத இறைச்சியை சாப்பிட்ட 2 வயது குழந்தை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பார்க்க

விவாதத்துக்கு ஆப்சென்ட், வாக்கெடுப்புக்கு பிரசன்ட்! ராகுலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதத்தை புறக்கணித்துவிட்டு, நள்ளிரவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மட்டும் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.மேலும், எதிர்க்க... மேலும் பார்க்க

வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்: மமதா வேண்டுகோள்!

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் வதந்திகளுக்கு செவிசாய்க்காமல் வரவிருக்கும் ராம நவமி விழாவை அமைதியாகக் கொண்டாடுமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி வேண்டுகோள் விடுத்தார். ஏப்ரல் 6ஆம... மேலும் பார்க்க