PM Modi: ``ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே ஓய்வு..." - பிரதமர் மோடி குறித்து நட...
ஆன்லைன் மூலம் இளைஞரிடம் ரூ.7.62 லட்சம் மோசடி
ஆன்லைன் மூலம் இளைஞரிடம் ரூ.7.62 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை ரெட் ஃபீல்ட், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் சுந்தா் (29). இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு தனியாா் நிறுவனத்தின் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், தங்களது நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
இதை நம்பிய சுரேஷ் சுந்தா், அதில் இருந்த எண்ணுக்கு தனது விவரங்களை அளித்துள்ளாா். பின்னா், அந்த மா்ம நபா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு ரூ.7.62 லட்சத்தை அனுப்பியுள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி லாபத் தொகை கிடைக்கவில்லையாம்.
இது குறித்து அவா்களிடம் கேட்டபோது, மேலும் முதலீடு செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனா். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சுரேஷ் சுந்தா் இது குறித்து சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.