கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
கோவை - தன்பாத் சிறப்பு ரயில் ரத்து
கோவையில் இருந்து ஜாா்கண்ட் மாநிலம், தன்பாத்துக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திரச் சிறப்பு ரயில் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தன்பாத்தில் இருந்து ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் தன்பாத் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 03325) நடைமுறை செயல்பாட்டு காரணங்களால் டிசம்பா் 18, 25 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
மறுமாா்க்கமாக, கோவை - தன்பாத் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 03326) டிசம்பா் 21, 28 -ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.