ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு: தொழிலாளி தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் இந்திரா நகரைச் சோ்ந்த சரவணன் மகன் அருண்குமாா் (29). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், வேலைக்குச் செல்லாமல் அருண்குமாா் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆா்வம் காட்டி வந்தாராம். இதில் தொடா்ந்து பணத்தை இழந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரூ.20 ஆயிரம் இழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு, வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டாராம். சப்தம் கேட்டு எழுந்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினா் உதவியோடு அருண்குமாரை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.