செய்திகள் :

ஆம் ஆத்மியில் இணைந்தார் பாஜக முன்னாள் எம்எல்ஏ அனில் ஜா

post image

தலைநகர் தில்லியில் பாஜக முன்னாள் எம்எல்ஏ அனில் ஜா ஞாயிற்றுக்கிழமை ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துகொண்டார்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் அவர் ஆம் ஆத்மியில் இணைந்தார். இவர் இரண்டு முறை கிராரி சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து பாஜக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி அமைச்சருமான கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய நிலையில் தற்போது பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.

அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேஜரிவால், ஆம் ஆத்மி கட்சிக்கு அனில் ஜாவை வரவேற்கிறேன். பூர்வாஞ்சலின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவராக அனில் ஜா கருதப்படுகிறார்.

இரு கட்சிகளும் (காங்கிரஸ் மற்றும் பாஜக) பூர்வாஞ்சல் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளன.

நான் முதல்வராக பதவியேற்றதும் முதன்முறையாக சட்டவிரோத காலனிகளில் சாலைகள், சாக்கடைகள், குடிநீர் குழாய்கள் அமைக்கத் தொடங்கினேன். 1750 சட்ட விரோத காலனிகளில் 1650 இடங்களில் தண்ணீர் குழாய் பதித்துள்ளோம் என்றார்.

மேலும் பூர்வாஞ்சல் சமூகத்தை மத்திய அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டிய கேஜரிவால், சமூகத்திற்காக அவர்கள் செய்த பணிகள் குறித்து பாஜகவிடம் கேள்வி எழுப்பினார்.

மணிப்பூரில் பாஜக ஆதரவை திரும்பப் பெற்றது தேசிய மக்கள் கட்சி!

மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கன்ராட் கே. சங்மா அறிவித்துள்ளார். மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், முதல்வர் பிரேன் சிங் ... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களுக்கும் விருதை அர்ப்பணிக்கிறேன்! பிரதமர் நெகிழ்ச்சி

நைஜீரியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் (ஜிசிஓஎன்)’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சர்வதேச அளவ... மேலும் பார்க்க

தில்லியில் 1 மணி நேரம் வெளியே போனால்கூட நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்!

புதுதில்லியில் மாசடைந்துள்ள காற்றை வெறும் 1 மணி நேரம் சுவாசித்தால் போதும், நுரையீரலில் கடும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.தேசியத் தலைநகர் மற்றும் அதனையொட்டிய என்சிஆர் பகுத... மேலும் பார்க்க

சிறந்த வாழ்க்கையா? மாதம் 1,500 ரூபாயா? பெண்களுக்கு பிரியங்கா கேள்வி!

பெண்கள் சிறந்த வாழ்க்கைக்காக வாக்களிக்க வேண்டுமே தவிர மாதம் ரூ.1500 கிடைக்கிறது என்பதற்காக வாக்களிக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச்செயலாளரும் வயநாடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான பிரியங்கா காந்தி தெரிவ... மேலும் பார்க்க

எலிசபெத் ராணிக்கு வழங்கப்பட்ட கௌரவம் பிரதமர் மோடிக்கும்..!

எலிசபெத் ராணிக்கு பின், நைஜீரியாவின் உயரிய விருதை பெறும் பெருமை பிரதமர் நரேந்திர மோடிக்கு சேர உள்ளது.ஆப்பிரிக்க தேசமான நைஜீரியாவின் அதிபா் போலா அகமது தைனுபு அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு இருநாள்கள் பய... மேலும் பார்க்க

மங்களூரு: சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 இளம் பெண்கள் பலி

மங்களூருவில் சொகுசு விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி மூன்று இளம் பெண்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், உல்லல் கடற்கரைக்கு அருகில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் சனிக்க... மேலும் பார்க்க