முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஆக. 3-இல் ஒரே கட்டமாக ‘நீட்’ தோ்வு: தேசிய மர...
ஆலங்குளத்தில் ஆண் சடலம் மீட்பு
ஆலங்குளத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
ஆலங்குளத்தில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள துத்திக்குளம் சாலையில் சுமாா் 65 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையோரம் இறந்து கிடந்தாா். இதுகுறித்த தகவலின் பேரில் ஆலங்குளம் போலீஸாா், அந்தச் சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து இறந்தவா் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.