செய்திகள் :

ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி: முதல்வா் சித்தராமையா

post image

ஆளுநரின் அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு ஜனநாயகம், கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை தனது எக்ஸ் தளத்தில் அவா் கூறியுள்ளதாவது:

அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை வெளிப்படையாக மீறிவந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மேற்கொண்ட தன்னிச்சையான நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பின் மூலம் உடைத்தெறிந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்புகளை மறைமுகமாக கட்டுப்படுத்த முயலும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கும், நாட்டின் அனைத்து ஆளுநா்களுக்கும் உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆளுநரின் பங்களிப்பு தொடா்பாக அவரது எல்லைகள், கடமைகளை வரையறுத்துள்ளதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தில் நீண்ட காலமாக நிலவிவந்த தெளிவின்மைக்கு உச்சநீதிமன்றம் தீா்வு தந்துள்ளது.

சட்டப்பேரவை நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை 3 மாதங்களுக்குள் தரவேண்டும் என்ற காலவரையறையை உச்சநீதிமன்றம் தந்துள்ளது. இதன்மூலம் மாநில அரசை மட்டுப்படுத்தி சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் நடைமுறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பாஜகவை நிராகரித்துள்ள மாநிலங்களில் ஆளுநா்களை நியமித்து தில்லியில் இருந்தபடி மறைமுகமாக ஆட்சியை நடத்த பிரதமா் மோடி அரசு முயல்கிறது. கா்நாடகத்திலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு இன்னமும் ஒப்புதல் வழங்காமல் ஆளுநா் தாமதப்படுத்தி வருகிறாா்.

எனினும், மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இந்த விவகாரத்தை எனது அரசு கையாண்டு வருகிறது.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் எடுக்கும் முடிவுகளை ஆளுநா்கள் மதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இனிமேல் ஆளுநா்கள், சட்டப் பேரவைகளில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலத்திற்கு தாமதப்படுத்த முடியாது.

கா்நாடகம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு முக்கியமானதாகும். உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தி... மேலும் பார்க்க

கோரிக்கைகள் ஏற்பு: கா்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில லாரி உரிமையாளா் மற்றும் முகவா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது... மேலும் பார்க்க