ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 3 வயது குழந்தை!
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தில் விவசாய நிலத்திலுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் 3 வயது பெண் குழந்தை தவறி விழுந்துள்ளது.
கோட்புட்லி- பெஹ்ரோர் மாவட்டத்தைச் சேர்ந்த சேத்துனா (வயது 3) என்ற பெண் குழந்தை, சாருண்டு பகுதியிலுள்ள தனது தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இன்று (டிச.23) விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த 150 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதையும் படிக்க: கோயிலில் சிலிண்டர் வெடிப்பு! 9 ஐயப்ப பக்தர்கள் படுகாயம்!
இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராஜஸ்தான் மாநில தொழில் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விரைவாக சிறுமியை மீட்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.