Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
இடிந்து விழுந்த பயணியா் நிழற்கூடம் சுற்றுச்சுவா்
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குள்பட்ட பகண்டை கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பயணியா் நிழற்கூடத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பகண்டை கூட்டுச்சாலைப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நிழற்கூடத்தின் மீது கட்டப்பட்டிருந்த கைப்பிடி சுற்றுச்சுவரின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை திடீரென தானாகவே இடிந்துவிட்டதாகத் தெரிகிறது.
கட்டடப் பணிகள் முழுவதும் நிறைவடையாத நிலையில், பயணியா் நிழற்கூடத்தின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்தது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.