செய்திகள் :

இந்தியன் - 3 அப்டேட்!

post image

நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் - 3 குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.

லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதுடன் கடுமையான இணைய கிண்டல்களை எதிர்கொண்டது. ஆனாலும், இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

இதையும் படிக்க: மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி - 2!

தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தில் கவனம் செலுத்தினார். அப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், இந்தியன் - 2 தோல்வியால் இந்தியன் - 3 படப்பிடிப்பில் மேற்கொண்டு செலவு செய்ய லைகா விரும்பாததால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில மாதங்களுக்குள் நடிகர் கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு படப்பிடிப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.

திருவண்ணாமலை கோயிலில் அனிருத்!

மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இசையமைப்பாளர் அனிருத் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். மேலும் பார்க்க

கூலி படத்தின் புதிய போஸ்டரில் இருப்பது யார்?

முகம் சரியாக தெரியாமல் கூலி படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.ப... மேலும் பார்க்க

ஸ்ருதியின் சர்வதேச பட டிரைலர்!

நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள சர்வதேச திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இறுதியாக இவர் நடித்த சலார் திரைப்படம் மிகப்பெரிய... மேலும் பார்க்க

ஜென்டில்வுமன் படத்தின் ஆசை நாயகி பாடல்!

ஜென்டில்வுமன் படத்தின் 2ஆவது பாடல் வெளியாகியுள்ளது. லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியுள்ள ஜென்டில்வுமன் படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியு... மேலும் பார்க்க

பைசன் வெளியீடு எப்போது?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விக்ரமின் மகனானதுருவ் விக்ரம், ஆதித்ய வர்மா படத்தின் மூலம் சினிமாவில்அறிமுகமானார... மேலும் பார்க்க

வீர தீர சூரன் மேக்கிங் விடியோ!

இயக்குநர் சு. அருண் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு வீர தீர சூரன் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளனர்.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்... மேலும் பார்க்க