செய்திகள் :

இந்தியாவின் டேவிட் வார்னர் இவர்தான்; இளம் வீரருக்கு புஜாரா புகழாரம்!

post image

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் குறித்து இந்திய வீரர் புஜாரா பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாளை (நவம்பர் 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.

புஜாரா கூறுவதென்ன?

பார்டர் - கவாஸ்கர் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், கே.எல்.ராகுல் மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும் என புஜாரா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கப் போகிறது எனத் தெரியவில்லை. 3-வது இடத்தில் மிகுந்த அனுபவமுள்ள கே.எல்.ராகுல் அந்த இடத்தில் களமிறங்க வேண்டும் எனக் கூறுவேன். இடதுகை வலதுகை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருப்பதை உறுதி செய்ய இந்திய அணி தேவ்தத் படிக்கல்லை 3-வது வீரராக களமிறக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: நீண்ட காலம் இந்திய அணியில் விளையாட வேண்டுமா? ஜெய்ஸ்வாலுக்கு விராட் கோலி கொடுத்த அறிவுரை!

அவர் 5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்குபவர். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதைக் காட்டிலும், 3-வது வீரராக களமிறங்குவது அவருக்கு எளிதாக இருக்கும். அவரால் 3-வது இடத்தில் நன்றாக பேட்டிங் செய்ய முடியும் என்றால், அது அணிக்கு நன்றாக அமையும் என்றார்.

இந்தியாவின் டேவிட் வார்னர்

இந்தியா உருவாக்கிய மிகவும் திறமையான வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் ஒருவர் என புஜாரா அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஜெய்ஸ்வால் நிறைய விஷயங்களை நிரூபிக்க உள்ளார் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். இந்திய அணி இந்த தொடரை வெல்ல வேண்டுமென்றால், ஜெய்ஸ்வால் அவரது சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும். அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். ஆஸ்திரேலிய அணிக்காக டேவிட் வார்னர் எப்படி விளையாடினாரோ, அதேபோல இந்திய அணிக்காக ஜெய்ஸ்வாலால் விளையாட முடியும்.

இதையும் படிக்க: உங்களது எதிர்காலம் தெரிய வேண்டுமா? சஞ்சய் மஞ்ச்ரேக்கரை பாருங்கள்; கிண்டலடித்த முகமது ஷமி!

தொடக்க ஆட்டக்காரராக அவர் அணிக்கு மிக முக்கிய வீரராக உள்ளார். அவர் மனதளவில் மிகவும் உறுதியாக இருக்கிறார். அவர் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்றார்.

107*, 120*, 151... டி20 கிரிக்கெட்டில் திலக் வர்மா புதிய சாதனை!

டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் திலக் வர்மா படைத்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு... மேலும் பார்க்க

2 நாள்களில் 200 ஓவர்கள் பேட்டிங் பயிற்சி; பெர்த் டெஸ்ட்டுக்கு தீயாய் தயாரான ஜெய்ஸ்வால்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் முன்பாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.இந்த... மேலும் பார்க்க

முதல் நாள் விளையாடிய ஆடுகளமா இது? ஆச்சரியத்தில் ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்... மேலும் பார்க்க

புதிய சாதனையை நோக்கி நகரும் பெர்த் டெஸ்ட்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பெர்த் டெஸ்ட் போட்டி புதிய சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல்... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: இருவர் அரைசதம்; முதல் நாளில் மே.இ.தீவுகள் 250 ரன்கள் குவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 250 ரன்கள் எடுத்துள்ளது.வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2... மேலும் பார்க்க

மெகா ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார்; முன்னாள் வீரர் நம்பிக்கை!

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.ஐபிஎல் மெகா ... மேலும் பார்க்க