நாமக்கல்: 23 மணிநேரம் நடந்த விஜிலன்ஸ் ரெய்டு, லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!
மெகா ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார்; முன்னாள் வீரர் நம்பிக்கை!
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலம் நாளை (நவம்பர் 24) மற்றும் நாளை மறுநாள் (நவம்பர் 25) சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் மெகா ஏலம் நாளை தொடங்கவுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்களை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க:72 ஆண்டுகளுக்குப் பிறகு... பெர்த் டெஸ்ட்டில் உடைக்கப்பட்ட வரலாறு!
ரூ.25 கோடிக்கும் மேல்...
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டாவில் நாளை தொடங்கவுள்ள நிலையில், மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த்தின் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமைகளை தவிர்த்து, அவர் மிகவும் சிறப்பான பண்புகளைக் கொண்டவர். அவர் கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தும் பண்புகளைக் கொண்டுள்ளார். அதனால், எந்த ஒரு அணி உரிமையாளரோ அல்லது பயிற்சியாளரோ அவரை இழக்க விரும்பமாட்டார்கள். ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.25 கோடிக்கும் அதிகமாக ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்படுவார் என நினைக்கிறேன்.
இதையும் படிக்க: “உலகின் சிறந்த வீரர்...” ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்!
பஞ்சாப், தில்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளிடத்தில் ரிஷப் பந்த்தினை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு தொகை இருக்கிறது. ஏலத்தில் போட்டி நிலவும் பட்சத்தில், ரூ.25 கோடியைக் கடந்து இன்னும் 4-5 கோடிகள் அதிகத் தொகைக்கு ரிஷப் பந்த் ஏலம் போவார். அவரை யாரும் இழக்க விரும்பமாட்டார்கள்.
இது மூன்று ஆண்டுகளுக்கான ஏலம். ரிஷப் பந்த்தை எந்த அணி ஏலத்தில் எடுக்கிறதோ அந்த அணிக்காக அவர் மூன்று ஆண்டுகள் விளையாடுவார். ரிஷப் பந்த்தை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸிடம் பட்ஜெட் இல்லை. ஆனால், அவர் கண்டிப்பாக ஆர்சிபி அல்லது கொல்கத்தா அணியின் கேப்டனாக மாறப்போகிறார் எனத் தெரிகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் மாறும் பட்சத்தில் அந்த அணிக்கான ரசிகர்கள் எண்ணிக்கை பல மடங்காக உயரும் என்றார்.