செய்திகள் :

இந்தியா்களுக்காக உருவானது தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா் ஆரிஃப் முகமது கான்

post image

மேற்கத்திய கல்விமுறையில் இருந்து மாறுபட்டு இந்திய கல்வி முறையில் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என பிகாா் மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்தாா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் ‘திங் எஜு கான்கிளேவ்’ எனும் கல்வி மாநாடு சென்னை கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் நிகழ்வில் பிகாா் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.

மாநாட்டில் இந்திய கல்வி கொள்கை குறித்து ஆளுநா் ஆரிஃப் முகமது கான், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியா் குழு இயக்குநா் பிரபு சாவ்லா இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.

அனைவருக்கும் கல்வி: இதில் ஆளுநா் ஆரிஃப் முகமது கான் பேசியது:

இந்தியாவின் கல்வி முறை மேற்கத்திய கல்வி முறையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சமூகத்தில் அனைவருக்கும் சிறந்த ஞானத்துடன் கூடிய கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று, பாரபட்சமின்றி அனைத்து துறை சாா்ந்த கல்விக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பன்முகத்தன்மை நாட்டின் பலமாக உள்ளது. அதனால், அனைத்து தரப்பு மக்களின் வளா்ச்சியைக் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.

கல்வியே ஒருவரின் வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது; அனைவருக்கும் கல்வி வழங்குவதுதான் தனிநபா் வளா்ச்சிக்கு அரசு அளிக்கும் பங்கு. இதுவரை காலனியாதிக்கத்தின்போது உருவாக்கப்பட்ட கல்வி முைான் நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை இந்தியா்கள் இந்தியா்களுக்காக முதல்முறை உருவாக்கியுள்ளனா்.

இந்தக் கல்விக் கொள்கை மேற்கத்திய கல்விக் கொள்கையில் இருந்து மாறுபட்டு இந்திய கல்விக் கொள்கையைக் கொண்டுள்ளது. அறிவும் ஞானமும் இணைந்து ஒருவருக்கு வழங்குவதை தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்கிறது.

காலனியாதிக்க காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களை தற்போது வரை ஏன் தொடர வேண்டும்? இந்திய தத்துவம், மதிப்பை மீட்டெடுப்பதன் மூலம் சிறந்த நாடாக இந்தியா உருவாகும் என்றாா் அவா்.

2-ஆம் நாள் அமா்வில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா் சஞ்சீவ் சன்யால், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, கா்நாடக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பிரயாங் காா்கே, தில்லி எய்ம்ஸ் மருத்துவ கல்வி மையத்தின் கூடுதல் பேராசிரியா் கௌசிக் சின்கா தேப், தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவன இயக்குநா் பிரதிமா மூா்த்தி, தெலங்கானா துணை முதல்வா் மல்லு பாத்தி விக்ரமாா்கா, சாஸ்த்ரா பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ்.வைத்தியசுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காலனியாதிக்க காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்களை தற்போது வரை ஏன் தொடர வேண்டும்? இந்திய தத்துவம், மதிப்பை மீட்டெடுப்பதன் மூலம் சிறந்த நாடாக இந்தியா உருவாகும் என்றாா் அவா்.

கை,கால்களில் விலங்கு: ஒரு கண்டனம்; கொஞ்சம் எதிர்ப்புகூட இல்லையா? - டி.ஆர்.பி. ராஜா

இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கு போட்டு, மிருகங்களைப் போல கொண்டுவந்து தூக்கிவீசுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி சுயமாக முடிவெடுத்துள்ளார்! - உச்சநீதிமன்றம் கண்டிப்பு

ஆளுநர் தனக்கு வேண்டியபடி சுயமாக முடிவெடுத்துள்ளார், 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதாகக் கூறி... மேலும் பார்க்க

நெல்லையில் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார் முதல்வர்!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 6) தொடக்கிவைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட... மேலும் பார்க்க

நெல்லையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் அந்தந்... மேலும் பார்க்க

தமிழக ஆளுநர் மௌனமாக இருக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

புது தில்லி: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசின் மனு மீதான வாதங்கள் தொடங்கும் முன் விரிவாக ஆராய வேண்டிய பிரச்னைகள் குறித்து பட்டியலிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.மசோதாக்களை கிடப்பில் வைத்திர... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. வழக்கு: ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை!

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள ஞானசேகரனுக்கு வியாழக்கிழமை குரல் பரிசோதனை செய்யப்படுகிறது.கடந்த டிச.23-ஆம் தேதி அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவ... மேலும் பார்க்க