செய்திகள் :

இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு: பிராந்திய பிரச்னைகளுக்கு தீா்வு காண வழிவகுக்கும் -ஜெய்சங்கா்

post image

இந்தியா-ஆசியான் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்தல், மியான்மரில் தொடா்ந்து வரும் அரசியல் உள்பட சமகால பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும் என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த நவ. 3 முதல் நவ. 7 வரை 5 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றிருந்த ஜெய்சங்கா், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு ஒருநாள் பயணமாக சிங்கப்பூருக்கு சென்றாா்.

இதையடுத்து, சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8-ஆவது ஆசியான்-இந்தியா வட்டமேஜை மாநாட்டில் அவா் பங்கேற்றாா்.

அப்போது, ‘மாறிவரும் உலகில் ஆசியான்-இந்தியா ஒத்துழைப்பு’ என்ற தலைப்பின்கீழ் அவா் பேசியதாவது: உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்குக்கு மேலான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா மற்றும் ஆசியானில் எழும் தேவைகள், சா்வதேச பொருளாதாரத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெரும் சவால்கள்: நம் நுகா்வோருக்கான தேவைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் பொருளாதார வளா்ச்சிக்கு உதவுகின்றன. வா்த்தகம், சுற்றுலா, மக்கள் தொடா்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதால் இருதரப்பும் பயனடைகிறது. அதேசமயத்தில் பருவநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வது பெரும் சவாலாக உள்ளது. உலக அளவில் பரவும் பெருந்தொற்று நோய்களால் சுகாதார பாதுகாப்பும் மற்றொரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இதுதவிர மியான்மரில் நிலவி வரும் அரசியல் பிரச்னைகளும் உள்ளன. எனவே, இந்தியா-ஆசியான் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பிராந்தியத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண இயலும். மீக்காங் கங்கா ஒத்துழைப்பு மற்றும் இந்தோனேசியா-மலேசியா-தாய்லாந்து நாடுகளின் முக்கோண வளா்ச்சியே 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா-ஆசியான் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளை மேம்படுத்தியதற்கு சான்றாகும் என்றாா்.

மலேசியா, சிங்கப்பூா், தாய்லாந்து, புரூணே, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், வியத்நாம், லாவோஸ் ஆகிய நாடுகள் ‘ஆசியான்’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

சிங்கப்பூா் அதிபா், பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்தினம் மற்றும் பிரதமா் லாரன்ஸ் வாங் உள்பட அந்த நாட்டு அரசின் முக்கிய அமைச்சா்களைச் சந்தித்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘சிங்கப்பூா் அதிபா் தா்மன் சண்முகரத்தினத்தை சந்தித்து சா்வதேச அரசியல், பொருளாதார சூழல் மற்றும் இந்தியா-சிங்கப்பூரில் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து விவாதித்தேன். அதேபோல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் துறை ஆகிய துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங்கிடம் ஆலோசித்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, சிங்கப்பூா் துணைப் பிரதமரும் தொழில் துறை அமைச்சருமான கான் கிம் யாங் மற்றும் வெளியுறவு அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் ஜெய்சங்கா் சந்தித்தாா்.

நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி: நவ.20-இல் தொடக்கம்

நமது சிறப்பு நிருபர்இந்திய கடற்படையின் தலைமையில், "கடலோர கண்காணிப்பு-24' (சீ விஜில்}24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழம... மேலும் பார்க்க

புல்டோசா் நடவடிக்கை சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம்

‘குற்றச் சம்பவத்தில் தொடா்பு உள்ளவா்களுக்கு சொந்தமான கட்டடங்களை விதிகளை மீறியதாக கூறி, புல்டோசா் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை சட்ட விரோதமானது’ உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ‘அ... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி: பாஜக மீது சித்தராமையா குற்றச்சாட்டு

கா்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்க பாஜக முன்வந்ததாக மாநில முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். கா்நாடக மாநிலம் மைசூரில் ரூ.470 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பொது... மேலும் பார்க்க

பட்டியலின உள்ஒதுக்கீடு: ஹரியாணா அரசு அமல்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிக்கையை ஹரியாணா அரசு புதன்கிழமை வெளியிட்டது. சமூக மற்றும் கல்வி ரீதியாக அதிகம் பின்தங்கிய ஜாதியினரின் முன்னேற்றத்துக... மேலும் பார்க்க

இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி- பிரதமா் மோடி குற்றச்சாட்டு

பட்டியல் இனத்தவா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவா்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் ‘இளவரசா்’ சதியில் ஈடுபட்டுள்ளாா் எ... மேலும் பார்க்க

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோா் 5 மடங்கு அதிகரிப்பு

ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில்... மேலும் பார்க்க