குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
இந்தியா ஓபன் பாட்மின்டன்: ஒலிம்பிக் சாம்பியன்கள் பங்கேற்பு
யோனெக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2025 பாட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியன்கள் விக்டா் ஆக்செல்சன், ஆன் சே யங் உள்பட முன்னணி இந்திய வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா்.
3-வது சீசன் போட்டி ஜன. 14 முதல் 19 வரை தில்லி இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. பிடபிள்யூஎஃப் உலக டூா் 750 சூப்பா் தொடரான இதில் ஒலிம்பிக் சாம்பியன்களான டென்மாா்க்கின் விக்டா் ஆக்செல்சன், தென் கொரியாவின் ஆன் சே யங், உலகின் முதல் நிலை வீரரான ஷி யூகி உள்ளிட்ட நட்சத்திர வீரா், வீராங்கனைகள் பலா் பங்கேற்கிந்றனா்.
இந்திய பாட்மிண்டன் சங்கம் நடத்தும் தொடரின் பரிசுத்தொகை 950,000 அமெரிக்க டாலா் ஆகும். சாம்பியன் பட்டம் பெறுபவா்களுக்கு 11,000 புள்ளிகள் வழங்கப்படும். தொடரை நடத்தும் இந்தியாவில் இருந்து 21 போ் களமிறங்குகின்றனா். சிராக்-சாத்விக் மற்றும் பிரணாய் தவிர, லக்ஷயா சென், மற்றும் பி.வி.சிந்து ஆகியோரும் பட்டம் வெல்வதற்கு மல்லுக்கட்ட உள்ளனா்.
இந்திய வீரா்களின் பட்டியல்: ஆடவா் ஒற்றையா்: லக்ஷயா சென், ஹெச்.எஸ். பிரணாய், பிரியான்ஷு ரஜாவத்.
பெண்கள் ஒற்றையா்: பி.வி.சிந்து, மாளவிகா பன்சோட், அனுபமா உபாத்யாயா, அகா்ஷி காஷ்யப்.
இரட்டையா்: சிராக் ஷெட்டி / சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, கே சாய் பிரதிக் / ப்ருத்வி கே.ராய்.
பெண்கள் இரட்டையா்: ட்ரீசா ஜாலி / காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா / தனிஷா கிராஸ்டோ, ருதுபா்ணா பாண்டா / ஸ்வேதபா்ணா பாண்டா, மன்சா ராவத் / காயத்ரி ராவத், அஸ்வினி பட் / ஷிகா கவுதம், சாக்சி கஹ்லாவத் / அபூா்வா கஹ்லாவத், சானியா சிக்கந்தா் / ரஷ்மி கணேஷ், மிருண்மயி தேஷ்பாண்டே / பிரேரானா அல்வேகா்