செய்திகள் :

இந்தியா மீதான வரி புரிந்துகொள்ளக்கூடியதே; ஆனால் ரஷியா மீது...! - ஸெலென்ஸ்கி கருத்து

post image

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு புரிந்துகொள்ளக்கூடியது என்றும் ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான வரி விதிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் ஸெலென்ஸ்கி பேசுகையில்,

"இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு புரிந்துகொள்ளக்கூடியதுதான். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக மற்றவர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை அமெரிக்கா காத்திருக்கக் கூடாது. அவ்வாறு தாமதப்படுத்தினால் ரஷியா தயாராக அதிக நேரத்தைக் கொடுப்பதாக அமையும்.

கடந்த மாதம் ரஷியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற அலாஸ்கா உச்சி மாநாட்டில் உக்ரைன் விலக்கிவைக்கப்பட்டதன் மூலமாக புதின் அதிகப்படியான நன்மைகளைப் பெற்றுள்ளார். புதினுக்கு இது போன்ற பல மாநாடுகளுக்கு இந்த அலாஸ்கா மாநாடு வழிவகுத்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க புதின் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். அமெரிக்காவின் பலத்தை ரஷியா புரிந்துகொண்டுள்ளது. எனவே, ரஷியாவுக்கு எதிராக மிகவும் வலுவான கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்கா தன்னளவில் மிகவும் வலிமையானது. அவர்களால் இதை விரைவாகச் செய்ய முடியும். அமெரிக்கா வலுவான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். ஏனெனில் இப்போது அது வலுவாக இல்லை.

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடை செய்யும் நோக்கில் இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். இதன் மூலமாக ரஷியா பேச்சுவார்த்தைக்கு வரும் என்று நம்பினார். ஐரோப்பிய ஒன்றியம் தங்களுடன் சேர்ந்து முன்வந்தால் இதைச் செய்கிறோம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்" என்றார்.

Ukraine President Zelenskyy says tariffs on India 'understandable' but US must not wait to act against Russia

இதையும் படிக்க | வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர்

“காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவி வகிக்கும் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார்.ஜெனீவாவில் செய்தியாளர... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது

இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் இறந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்க... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவ தலைமைத் தளபதி விரைவில் சந்திப்பு!

பாகிஸ்தான் பிரதமரும் ராணுவ தளபதியும் இம்மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். இம்மாதம் 25-ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாக இருநாட்டுத் தலைமைக்கும் நெருக... மேலும் பார்க்க

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென முஸ்லிம் நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. கத்தார் தலைநகர் தோஹாவில் திங்கள்கிழமை(செப். 15) அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை ... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் விரிவாக்கம்! மக்கள் வெளியேற உத்தரவு!

காஸா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. காஸா நகரத்தின் மீது, நேற்று (செப்.15) நள்ளிரவு ம... மேலும் பார்க்க

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நெருங்கிய ஆதரவாளரான சார்லி கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, அந்நாட்டின் செயலாளர் மார்கோ... மேலும் பார்க்க