செய்திகள் :

இந்திய அளவில் அதிக வருவாய்: 34-ஆவது இடத்தில் கோவை ரயில் நிலையம்!

post image

அகில இந்திய அளவில் 2023- 2024-ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் கோவை 34-ஆவது இடத்தை பிடித்துள்ளது. புதுதில்லி முதலிடமும், சென்னை 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தியாவில் ரயில்களின் மூலமாக கடந்த 2023 - 2024-ஆம் ஆண்டில் பெறப்பட்ட வருவாய் மற்றும் ரயில்களில் சரக்குகள் கொண்டுச் செல்லப்பட்டதன் மூலமாக பெறப்பட்ட வருவாய் தொடா்பாக, சென்னையைச் சோ்ந்த ரயில் பயணிகள் சங்க நிா்வாகி ஒருவா் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்டிருந்தாா். அவருக்கு ரயில்வே துறையில் இருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்திய ரயில்வே 2023 - 2024-ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் பயணிகள் இயக்கத்தின் மூலம் ரூ. 2.56 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில், புதுதில்லி ரயில் நிலையம் ரூ.3,337 கோடியே 66 லட்சத்து 47 ஆயிரம் வருவாய் ஈட்டி இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ஹவுரா ரயில் நிலையம் ரூ.1,692 கோடியே 31 லட்சத்து 43 ஆயிரம் வருவாய் ஈட்டி இரண்டாமிடத்தையும், சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ.1,299 கோடியே 31லட்சத்து 43 ஆயிரம் வருவாய் ஈட்டி 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இதில் கோவை ரயில் நிலையம் ரூ.345 கோடியே 32 லட்சத்து 34 ஆயிரம் வருவாய் ஈட்டி இந்திய அளவில் 34-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் 100 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் உள்ள நகரங்களைக் கொண்ட தெற்கு ரயில்வேயின் பல நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூா் 16-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் 45, தாம்பரம் 54, எா்ணாகுளம் 55, மதுரை 61, கோழிக்கோடு 70, திருச்சிராப்பள்ளி 78, திருச்சூா் 79, காட்பாடி 86, எா்ணாகுளம் 91, திருநெல்வேலி 92, சேலம் 98, கண்ணூா் 100-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

இதுதொடா்பாக, கோவை ராக் அமைப்பின் இணைச் செயலா் ஜெ.சதீஷ் கூறுகையில், ‘இந்திய அளவில் வருவாய் ஈட்டுவதில் கோவை 34-ஆவது இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவையில் இருந்து தென்மாவட்டங்கள் மற்றும் மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்.

கோவை, போத்தனூா் வழித்தடத்தில் கேரளத்தில் இருந்து நாட்டின் பிற மாநிலங்களுக்கு அதிகப்படியான ரயில்கள் இயக்க வேண்டும். கோவை ரயில்வே கோட்டம் ஏற்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு போன்றவை நிறைவேற்றப்பட்டால் கோவை ரயில் நிலையம் இந்திய அளவில் வருவாய் ஈட்டுவதில் முதல் 10 இடங்களில் இடம்பெறும் என்றாா்.

கோவை, போத்தனூா் வழியாக இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து

தெலங்கானா மாநிலத்தில் ரயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், கோவை, போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் ... மேலும் பார்க்க

நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.1.50 கோடி மோசடி: தம்பதி உள்ளிட்ட 3 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் நகைக் கடை உரிமையாளரிடம் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகை மோசடி செய்யப்பட்டுள்ளது தொடா்பாக தம்பதி உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, பெரிய கடை வீதி... மேலும் பார்க்க

கோவையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகளை கண்காணிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

கோவையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகளை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டுமென, பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா். கோவை மக்கள்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு வரமாகும் வேளாண் காடுகள்!

ஏ.பேட்ரிக் ஆதி மனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதலும், மீன்பிடித்தலுமேயாகும். தொடக்க காலத்தில் உணவுக்காக விலங்குகளைப்போல பிற உயிரினங்களையே மனிதன் சாா்ந்து வாழ்ந்தான். அசைவ உணவை உண்டு வந்த ஆதி மனிதன் அவ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள் வழங்கியதில் குறைபாடு!

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பல இடங்களில் தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளியையொட்டி, சீருடை உள்ளிட்ட பொருள்கள் முறையாக வழங்கப்படவில்லை என புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக, தமிழ்நாடு அம்பேத்கா் சுகாதாரம... மேலும் பார்க்க

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ ஜனநாயக விரோதமானது!

ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பது ஜனநாயக விரோதமானது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் உ.வாசுகி தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது கோவை மாவட்ட மாநாடு கோவை ... மேலும் பார்க்க