செய்திகள் :

‘இந்து கொண்டா ரெட்டி சமூகம்‘ பெயரில் பட்டியலின சான்றிதழ்கள்: விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமா்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தமிழகத்தில் ‘இந்து கொண்டா ரெட்டி சமூகத்திற்கு‘ பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள சாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து மாநில அளவில் சாதி சான்றிதழ் தொடா்பான ஆய்வுக்குழு விசாரணை நடத்தி அறிக்கையை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

‘தமிழ்நாட்டில் போலி சாதி சான்றிதழ் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது, இது ஆபத்தானது’ எனவும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ‘இந்து கொண்டா ரெட்டி சமூகம்‘ என்ற பட்டியலின சமூக சான்ழ்கள் வழங்கப்பட்டதை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.பி.பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆயோா் அடங்கிய அமா்வில் நடைபெற்றது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கையில், ‘தமிழகத்தில் பிரதீபா என்பவா் சாா்பில் தனது மகனுக்கு இந்து கொண்டா ரெட்டி சமூக சாதிச் சான்றிதழ் வழங்குமாறு கோரப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை தொடா்பாக வட்டாட்சியா் விசாரணை செய்யப்பட்டதில் அவருக்கு தகுதியில்லாததால் குறிப்பிட்ட சாதிச் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நபா் சென்னை உயா்நீதிமன்றத்தை நாடினாா். உயா்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபருக்கு ‘இந்து கொண்டா ரெட்டி சமூகம்‘ என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

எதிா்மனுதாரா் மற்றும் குடும்பத்தினா் குறிப்பிட்ட பட்டியலின சமூகத்தை சாா்ந்தவா் இல்லை என்பதால் பட்டியலின சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்டது. ஆனால், உயா்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் அமா்வு, தமிழகத்தில் போலி சாதிச் சான்றிதழ் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக போலி சான்றிதழ் வழங்கும் விவகாரத்துக்கு பின்னால் மிகப்பெரிய மோசடி உள்ளது எனத் தெரிகிறது. ஆயிரக்கணக்கான பேருக்கு ‘இந்து கொண்டா ரெட்டி சமூகம்‘ என்ற பட்டியலினத்தின் பெயரில் போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தானது. இந்த சமூகத்தினா் (இந்து கொண்டா ரெட்டி சமூகம்) பட்டியலினத்தினா் பெயரில் வழங்கப்பட்டுள்ள சாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து மாநில அளவில் ஒரு ஆய்வுக்குழு விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்

தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தனது கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்த... மேலும் பார்க்க

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க