இந்து முன்னணி நிா்வாகியிடம் நகையைப் பறித்துசென்ற இளைஞா் கைது
திருப்பூரில் இந்து முன்னணி நிா்வாகியிடம் நகையைப் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இந்து முன்னணி கட்சியின் திருப்பூா் மாவட்ட பொதுச் செயலாளா் ஆா்.பாஸ்கரபாண்டியன். இவா், ராக்கியாபாளையத்தில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றுள்ளாா். முத்தன்னம்பாளையத்தை அடுத்த வாய்க்கால் மேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் இவரை வழிமறித்துத் தாக்கியுள்ளனா்.
மேலும், கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி அவா் அணிந்திருந்த 6 பவுனைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து நல்லூா் காவல் நிலையத்தில் பாஸ்கரபாண்டின் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், நகை பறிப்பில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சோ்ந்த சூா்யா (27) என்பவரைக் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய இருவரைத் தேடி வருகின்றனா்.