செய்திகள் :

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

post image

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

ஹிருதயபூர்வம்

சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் நாளை(செப். 26) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடும் குதிர சாடும் குதிரை

ஃபகத் ஃபாசில், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஓடும் குதிரை சாடும் குதிரை திரைப்படம், நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மஹா அவதார் நரசிம்மா

அஸ்வின் குமார் இயக்கத்தில் ஹோம்பலே நிறுவனம் தயாரித்த இதிகாச படமான மஹா அமதார் நரசிம்மா படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

சுமதி வளவு

மடப்பள்ளி என்ற பெயரில் வெளியான மலையாள மொழிப்படம், சுமதி வளவு என்ற பெயரில் தமிழில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அர்ஜுன் அசோகன், மாளவிகா மனோஜ், சித்தார்த் பரதன் நடித்துள்ளனர். ஜீ5 ஓடிடி தளத்தில் தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை வெளியாகிறது.

சுந்தர காண்டா

வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில் விருத்தி வகானி, ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் நடிப்பில் வெளியான சுந்தர காண்டா திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

மேஹலு செப்பின பிரேம கதா

தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்பைப் பெற்ற மேஹலு செப்பின பிரேம கதா (Meghalu Cheppina Prema Katha) திரைப்படத்தை நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.

கடந்த வார ஓடிடி

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான இந்திரா திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தை ஜீ5 ஓடிடியிலும் காணலாம்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் கேம் டிரைலர்!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான கேம் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தி கேம் (the game) என்கிற இணையத் தொடர் உருவாகியுள்ளது. அப்லாஸ் எண்டெர்யின்மெண்ட் தயாரித்த... மேலும் பார்க்க

அனுஷ்காவின் காதி: ஓடிடியில் எப்போது?

அனுஷ்காவின் காதி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக தகவல் தெரியவந்துள்ளது.நடிகை அனுஷ்கா பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் எதுவும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. ’மிஸ் ஷெட்டி மி... மேலும் பார்க்க

நிலவுரிமையைப் பேசினாலும் காந்தாரா ஒரு வியாபாரம்தான்: அதியன் ஆதிரை

தண்டகாரண்யம் படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை காந்தாரா திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அதியன் ஆதிரை தற்போது தண்டகாரண்யம் என... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் அல்வரெஸுக்கு முதல் ஹாட்ரிக்: அத்லெடிகோ த்ரில் வெற்றி!

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஜூலியன் அல்வரெஸ் (25 வயது) அத்லெடிகோ மாட்ரிட் அணியில் விளையாடி வருகிறார். ஸ்பானிஷ் லீக்கான லா லீகா தொடரில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அத்லெடிகோ மாட்ரிட் தன் சொந்த மண்ணில... மேலும் பார்க்க

அஜித்தைச் சந்தித்தாரா மார்கோ இயக்குநர்?

நடிகர் அஜித் குமார் - மார்கோ திரைப்படத்தின் இயக்குநர் கூட்டணியில் படம் உருவாகவுள்ளதாகக் தகவல் வெளியானது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித் குமார் கூட்டணியில் உருவான குட் பேட் அக்லி திரைப்படம்... மேலும் பார்க்க