ஹிந்தி- தமிழர்கள் பிரச்னை: பவன் கல்யாணுக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!
இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வட வானிலையே நிலவும். மேலும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். தொடா்ந்து மாா்ச் 17 முதல் 19-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் மாா்ச் 15-இல் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டை ஒட்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.