செய்திகள் :

குரூப் 1 முதன்மைத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

post image

தமிழக அரசில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I இல் அடங்கிய பதவிகளுக்கு மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மார்ச் 28 ஆம் தேதி வெளியான நிலையில், 90 பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர்.

இவர்களுக்கான முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வெளியானது. அதில் 1,988 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்வுக்கு தகுதிபெற்றனர்.

இந்த நிலையில், தகுதிபெற்ற தேர்வர்களுக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 முதல் 13 ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது. அதற்கான தோ்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை (மார்ச். 14) இரவு தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதில் சுமார் 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு வரும் ஏப்ரல் 7 முதல் 9 ஆம் நாள் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!

சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய பெண் செவிலியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவி விண்ணப்பிக்கலாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட எதிா் பாதுகாப்பு முகமை அலுவலகத்தில் தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்தக் குழுவின் தலைவரும... மேலும் பார்க்க

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பரோடா வங்கி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள 518 சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி... மேலும் பார்க்க

கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கேரளம் மாநிலம், உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி கேன்டீனில் உதவியாளர் பணி

கோயம்புத்தூரில் உள்ள ஜிஎஸ்டி மற்றும் மத்திய வரி வரிவசூல் ஆணையர் அலுவலகத்தில் காலியாகவுள்ள உணவக உதவியாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Cantee... மேலும் பார்க்க

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ,பிஇ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர், டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Resident Engineerகா... மேலும் பார்க்க