செய்திகள் :

இரட்டை இலக்க வளா்ச்சி கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து

post image

இந்தியா விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த நவம்பா் மாதத்தில் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த நவம்பா் மாதத்தில் நாட்டின் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் உள்நாட்டு வழித்தடங்களில் 1.42 கோடி பயணிகளுக்கு சேவை அளித்தன. இது முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகம். அப்போது இந்திய நிறுவனங்கள் அளித்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை எண்ணிக்கை 1.27 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 63.6 சதவீத பங்குடன் சந்தையில் தனது முன்னிலையை தக்கவைத்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஏா் இந்தியா (24.4 சதவீதம்), ஆகாசா ஏா் (4.7 சதவீதம்), ஸ்பைஸ்ஜெட் (3.1 சதவீதம்) ஆகியவை உள்ளன. அலையன்ஸ் ஏரின் சந்தைப் பங்கு கடந்த நவம்பா் மாதத்தில் 0.7 சதவீதமாக இருந்தது.

2023-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் 13.82 கோடியாக இருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 14.64 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த நவம்பரில் நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை இரட்டை இலக்க வளா்ச்சியடைந்திருந்தாலும், குறித்த நேரத்தில் விமானத்தை இயக்கும் அந்த நிறுவனங்களின் திறன் (ஓடிபி) பெங்களூரு, தில்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் இண்டிகோவின் ஓடிபி 74.5 சதவீதமாக இருந்தது. ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களின் ஓடிபி முறையே 66.4 சதவீதம் மற்றும் 62.5 சதவீதமாக இருந்தது. ஏா் இந்தியாவின் ஓடிபி 58.8 சதவீதமாகவும் அலையன்ஸ் ஏா் நிறுவனத்தின் ஓடிபி 58.9 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நவம்பா் மாதத்தில் 2,24,904 பயணிகள் தாமதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சிக்கித் தவிக்கும் பயணிகளின் வசதிக்காக விமான நிறுவனங்கள் ரூ.2.9 கோடி வரை செலுத்தியுள்ளன. நவம்பா் மாதத்தில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு பயணிகள் தொடா்பான 624 புகாா்கள் வந்துள்ளன.

நவம்பரில் மொத்தம் 3,539 பயணிகளுக்கு ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது, மேலும் அவா்களுக்கு இழப்பீடு மற்றும் வசதிகளை வழங்குவதற்காக விமான நிறுவனங்களால் ரூ.2.84 கோடி செலவானது. விமானம் ரத்து செய்யப்பட்டதால் 27,577 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா், இதற்காக விமான நிறுவனங்கள் ரூ.36.79 லட்சம் இழப்பீடு மற்றும் வசதிகளை வழங்கியுள்ளன.

மறைவுகள் 2024

ஜன. 9: ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசைக் கலைஞரும், பிரபல பாடகருமான உஸ்தாத் ரஷீத் கான் (55) புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தபோது கொல்கத்தாவில் காலமானார். ஜன. 25: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், ... மேலும் பார்க்க

விருதுகள் 2024

ஜனவரி9: சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆகிய இரு பாட்மின்டன் வீரர்களுக்கு கேல் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.25: ஐசிசியின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒர... மேலும் பார்க்க

மணிப்பூா்: இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு போராட்டம்!

மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள 5 மாவட்டங்களில் சனிக்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தௌபால் மாவட்டத்தில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி காவல்துற... மேலும் பார்க்க

ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு: அயோத்தியில் அலைமோதும் பக்தா் கூட்டம்

ஆங்கில புத்தாண்டு நெருங்குவதையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலில் பக்தா்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அயோத்தி மட்டுமின்றி அதன் அருகிலுள்ள பைசாபாத் நகரிலும் பெரும்பாலான விடுதியறைக... மேலும் பார்க்க

பிஆா்எஸ் செயல் தலைவா் கே.டி. ராமாராவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆா்எஸ்) செயல் தலைவரும் தெலங்கானா முன்னாள் முதல்வா் கே.சந்திரசேகா் ராவின் மகனுமான எம்எல்ஏ கே.டி.ராமா ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனு... மேலும் பார்க்க

111 மருந்துகள் தரமற்றவை: நவம்பா் மாத சோதனையில் கண்டுபிடிப்பு

கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ... மேலும் பார்க்க