இராமாயணம் நிறைவு: இன்று முதல் புதிய இதிகாச தொடர்!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர் 427 எபிசோடுகளுடன் கடந்த வாரம் நிறைவடைந்தது.
இதிகாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த இராமாயணம் தொடர், பல தொடர்களைப் பின்னுக்குத் தள்ளி, டிஆர்பியில் முன்னணியில் இருந்தது.
இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது. இராமாயணம் தொடர் கடந்த செப். 27 ஆம் தேதி 427 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
சன் தொலைக்காட்சியில் கடந்த 2 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்கு ஆன்மிக தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவதால், புதிய ஆன்மிக தொடரை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று , அனுமன் என்ற புதிய தொடர் இன்று(செப். 29) முதல் மாலை 6.30 ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
புராண கதையில் இடம் பெற்றுள்ள அனுமன் என்ற பாத்திரத்தை மையப்படுத்தி, இந்தப் புதிய தொடர் சன் தொலைக்காசியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கார் பந்தயம்... 3 ஆம் இடம் பிடித்த அஜித் அணி!